புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013





     ""ஹலோ தலைவரே... நம்ம நக்கீரன்தான் அட்டைப்படத்தில் 2ஜி-நெருங்கும் க்ளைமாக்ஸ்னு போட்டு விரிவா கட்டுரை வெளியிட்டது. இப்ப அதற்கான நிலவரங்கள் சீரியஸா  போய்க் கிட்டிருக்குதே.''nakkeeran

""ஆ.ராசாவின் கோரிக்கைப்படி ஜே.பி. சி.யில் அவரை அழைத்து சாட்சியமளிக்கச் சொல்லவேண்டும்னு அதே ஜே.பி.சி.யில் உறுப் பினரா இருக்கும் பா.ஜ.க.வின் சீனியர் லீடரும் முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்கா வலியுறுத்தியிருக்காரே.''

""ஆமாங்க தலைவரே.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான குருதாஸ்தாஸ் குப்தா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்பட பல கட்சிகளைச் சேர்ந்த ஜே.பி.சி. உறுப்பினர்களும் ஆ.ராசாவை சாட்சியமளிக்க அழைக்கணும்னும் அப்போதுதான் பல உண்மைகள் வெளிவரும்னும் வலியுறுத்தியிருக்காங்க. இதற்கெல்லாம் அடிப்படை காரணம், ஜே.பி.சி.யில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி அளித்த சாட்சியமும் அதையடுத்து 2ஜி வழக்குவிசாரணை நடக்கிற பாட்டியாலா கோர்ட்டில் அவர் அளித்த வாக்கு மூலமும்தான்.'' 

""அதையும் நம்ம நக்கீரன் குறிப்பிட்டிருந்ததே.''…

""சி.பி.ஐ. கோர்ட்டில் வாகன்வதி வாக்குமூலம் அளிக்கிறப்ப, 2ஜி ஒதுக்கீடு தொடர்பான பிரஸ் ரிலீஸில், நான்  ஒப்புதல் தந்த சிலவற்றை அடித்துவிட்டு வேறு பேனாவால் ஆ.ராசா எனக்குத் தெரியாமலேயே எழுதிட்டாரு. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது எல்.ஓ.ஐ. எனப்படும் லெட்டர் ஆஃப்  இன்ட்டென்ட் வழங்கப்பட்ட தேதி ஒன்றுக்கு மேற்பட்ட கம்பெனி களுக்கு ஒரே நாளாக இருந்தால் அவர்கள் விண்ணப் பித்த தேதியை சீனியாரிட்டியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் திருத்தம் செய்து, இந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆ.ராசா வேறு பேனா வால் எழுதி, என்னிடம் அனுமதி வாங்கியதுபோல அனுப்பிட்டாருன்னு குற்றம் சாட்டியிருந்தார். ஜே.பி. சி.யிலும் இதையேதான் ஏற்கனவே சொல்லியிருந்தாரு.'' 

""இதற்குத்தான் ஜே.பி.சி.யில் ராசா பதில் கொடுக்கணும்ங்கிறாரா? கோர்ட்டில் வாகன்வதி இதைச் சொன்னப்ப ராசா தரப்பின் பதில் என்னவாம்?'' 

""வாகன்வதி வாக்குமூலம் கொடுத்த அன்னைக்கு மதியம் செஷனில் ஆ.ராசா நேருக்கு நேரா கேள்விகள் கேட்டிருக்காரு. தொலைத்தொடர்புத் துறைகளில் அப்படி ஏதாவது அடித்துத் திருத்தப்பட்ட பகுதிகள் இடம்பெற்றிருக்கிறதான்னு காட்ட முடியுமான்னு சவால் விட்டிருக்காரு. குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸுக்கு தலைமை வகித்த பிரணாப் முகர்ஜிக்கு நீங்களாக நோட் அனுப்பியிருக்கிறீர்களே, அதில் நான் அடித்த தாக சொல்லும் பகுதிகளை எங்கே குறிப் பிட்டிருக்கிறீர்கள் மிஸ்டர் வாகன் வதி?ன்னு ஆ.ராசா கேட்க, அட்டர்னி ஜெனரலால் எந்த பதிலும் சொல்ல முடி யலை. ராசாவின் குறுக்கு கேள்விகளால் வாகன்வதி ரொம்பவே திணறிட்டாராம். இவர் பொய் சொல்கிறார். அதனால் நான் ஜெயி லில் கிடந்தேன் என்று வாகன்வதியின் வாக்கு மூலம் பற்றி நீதிபதி யிடம் சொல்லியிருக் கிறார் ஆ.ராசா.'' 

""இந்த செய்திகளையெல்லாம் டி.வி. யிலோ பத்திரிகைகளிலோ அதிகம் பார்க்க முடியலையே?''

""கோர்ட்டில் திணறியதை பெருசாக்க வேண்டாம்னு அட்டர்னி ஜெனரலே மீடியாக்கள்கிட்டே ஃப்ரெண்ட்லியா  கேட்டுக்கிட்டாராம். ஆனாலும், சில பத்திரிகைகளில் உண்மை கள் வெளிவந்தன. இதைவிடவும் அதிக உண்மைகளை ஜே.பி.சியில் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்கணும்ங்கிறதுதான் ராசாவின் நோக்கம். அவர் வாய் திறக்கும்போதுதான் 2ஜியில் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு என்னென்ன விவரங்கள் தெரியும், எப்படி ஒதுக்கீடு நடந்தது என்பதெல்லாம் முழுசா வெளியில் வரும்னு எதிர்க்கட்சிகள் நம்புது. ஆனா, ஜே.பி.சி தலைவரா இருக்கிறவர் காங்கிரஸ் எம்.பி. சாக்கோ. அவரோ, சாட்சி விசாரணையெல்லாம் முடிஞ்சிடிச்சின்னும் மார்ச் இறுதியில் அறிக்கை தாக்கல்செய் யப் போறோம்னும் சொல்லிக்கிட்டிருக்காரு. யாரைக் காப்பாற்ற இந்த அவசரம்னு எதிர்க்கட்சிகள் கேட்குது. உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டு இறுதி முடிவெடுப்பேன்னு சாக்கோ சொல்றார். 30 உறுப்பினர்களைக் கொண்ட ஜே.பி.சியில் காங்கிரசுக்கு 11 எம்.பிக்கள் இருக்காங்க. மற்ற கட்சிகளெல்லாம் உதிரிதான். அதனால, காங்கிரஸ் குரல்தான் எடுபடும்னு சொல்லப்படுது. ஆனாலும், எதிர்க் கட்சிகள் விடுவதா இல்லை. தாங்கள் வலியுறுத்துவது ஏற்கப் படாவிட்டால் ஜே.பி.சி அறிக் கையை நிராகரிப்பதுன்னு இருக் காங்களாம்.''

""திங்கட்கிழமையன்னைக்கு நாடாளுமன்றத்துக்கு ஆ.ராசா வந்தப்ப பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த்சிங் போன்ற வர்கள் கை கொடுத்தாங்களாமே?''

""காங்கிரசுக்கு எதிரா மிகப் பெரிய ஆயுதம் கிடைக்கப் போகுதே.. அந்த சந்தோஷமா இருக்கலாங்க தலைவரே.. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள்கிட்டே ஆலோசனை நடத்தியிருக்காரு. ஒவ்வொரு மாநில எம்.பிக்களையா சந்திக்கும் ராகுல், திங்கட்கிழமையன்னைக்கு மதியம் 1 மணி யிலிருந்து 2 மணிவரைக்கும் தமிழக எம்.பிக்களை சந்திச்சப்ப எல்லோருமே, ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்னும், தமிழ்நாட்டில் எல்லா கட்சிக்காரங்களும் காங்கிரசைத்தான் திட்டுறாங்கன்னும் சொல்லியிருக்காங்க. அப்ப ப.சி குறுக்கிட்டு, 2ஜி விவகாரத்தில் அதிருப்தியா இருக்கிற தி.மு.க., டெசோ மூலமா நமக்கு நெருக்கடி கொடுக்குதுன்னு சொல்லியிருக்காரு. எல்லா விவரங்களையும் கேட்டுக்கிட்ட ராகுல், தீர்மானத்தை  ஆதரிக்கும் நிலையை இந்தியா எடுக்கும் வாய்ப்பிருக்குன்னு தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள்கிட்டே சொல்லி யிருக்காரு. அப்புறம், ஒரு சில எம்.பிக்கள் கிட்டே மட்டும் தனியா ஒரு விஷயத்தை சொல்லியிருக்காராம்.''

""என்ன விஷயம்?''

""2ஜி சம்பந்தமாகத்தான்.. க்ளைமாக்ஸில் ராகுலோட என்ட்ரியை காங்கிரஸ் எம்.பி.க் களே எதிர்பார்க்கலையாம். அவங்ககிட்டே ராகுல். வாகன்வதி விஷயத்தில் தவறு நடந்திடிச்சின்னும், கோர்ட்டிலும் ஜே.பி. சியிலும் அவர் அளித்த வாக்குமூலங்கள் தனக்கு முன்கூட்டியே தெரியாமல் போயி டிச்சின்னும், தி.மு.க.வின் டி.ஆர்.பாலு         தன்னை சந்திச்சி பேசுனப்பகூட வாகன்வதி கோர்ட்டுக்கு போறதை சொல்லாம விட் டுட்டாருன்னும் ராகுல் சொல்லியிருக்காரு. அதோடு, தமிழக அரசியல் நிலவரம் பற்றி காங்கிரஸ் எம்.பிக்களிடம் கருத்துகேட்ட ராகுல், இந்தியாவின்  மிகப் பெரிய தலைவர் கலைஞர். அவருக்குரிய மரியாதையை நம்ம கட்சிக்காரங்க எல்லோரும் தரணும். தி.மு.க.வோடுதான் நம்ம கூட்டணி தொடருதுன்னு சொல்லியிருக்காரு.''

""ரிட்டையர்டான தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உடனடியா தமிழக அரசின் ஆலோசகரா நியமிக்கப் பட்டாரு. ஒரு வருட காலப் பதவியில் உட்காரவைக்கப்பட்டவரை 2 மாசத்திலேயே தூக்கிட் டாங்களே.. என்ன விஷய மாம்?''

""கோட்டை வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. .. .. 28-ந் தேதி யன்னைக்கு ஒரு ரெவியூ மீட்டிங் நடந்தது. மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில் தமிழக விவசாயிகள் நிலம் வழியா கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே எரிவாயுக் குழாய் அமைக்கிறது சம்பந்தமாத்தான் இந்த மீட்டிங். அதற்கு முதல்நாளே, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஜெ.வைத் தொடர்புகொண்டு, இந்த குழாய் பதிக்கிற வேலைகளுக்கு ஹைகோர்ட் 3 வாரத் தடை கொடுத்திருக்குன்னும், அரசாங்கத்தை கடுமையா விமர்சனம் பண்ணியிருக்குன்னும் சொல்லியிருக்காரு.''

""ம்''…

""அதில் ஜெ. படு டென்ஷ னாயிட்டாராம். சாரங்கி தலை மைச் செயலாளரா இருந்தப்பவே இது பற்றி ஆலோசனை நடந் திருக்கு. அப்ப இதே சாரங்கி தான், இது மத்திய அரசு நிறுவனம் சம்பந்தப்பட்டது. அதனால கோர்ட் தலையிடாதுன்னு சொல்லியிருக்காரு. மத்திய அரசு நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்னாலும், அதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் பயன் இருக்குதாம். கேரளாவுக்கும் கர்நாடகாவுக்குமான இந்த குழாய் பாதையால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாத நிலையிலும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களை சாரங்கி தொடர்புகொண்டு, குழாய் பதிக்க நிலங்களை க்ளியரன்ஸ் பண்ணிக்  கொடுக்கச்  சொல்லியிருக்காரு. ரிலையன்ஸ் அதிகாரிகளும் அவரை சந்திச்சிப் பேசியிருக்காங்க. கோர்ட் கண்டனத்தின் பின்னணி பற்றி ஜெ. விசாரிச்சப்ப இந்த விஷயமெல்லாம் தெரிய வந்ததால ரிவியூ மீட்டிங்கில், என்ன சார்.. ஆரம்பத் திலேயே நான் இதைப் பற்றி சந்தேகத்தோடு கேட்டப்ப நீங்கதானே எந்தப் பிரச்சினையும் இருக்காதுன்னு சொன்னீங்க.. கோர்ட் என்ன சொல்லியிருக்கு பார்த்தீங்களா? நீங்க கிளம்புங்கன்னு சொல்லியிருக்காரு. அன்னைக்கு சாயங்காலம் சாரங்கிக்கு ரிலீவிங் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கு.''

""ஜெ.வின் கட்டுப்பாட்டில் உள்ள உளவுத்துறை இது பற்றியெல்லாம் முன்கூட்டியே ரிப்போர்ட் கொடுக்கலையா?'' 

""அவங்க வேற அசைன்மென்ட்டில் பிஸியா இருக்காங்க. ஆளுங்கட்சி மந்திரிகள், மா.செக்கள் பற்றி அவங்க ரிப்போர்ட் எடுத்துக்கிட்டிருக்காங்க. அதிலும் மந்திரிகளாகவும் மா.செக்களாகவும் இருக்கிறவங்களைப் பற்றி சீரியஸா நோட் பண்றாங்களாம். உளவுத்துறை தரும் ரிப்போர்ட்டின்படி அமைச்சர்களிடமுள்ள மா.செ. பதவிகள் பறிக்கப்படலாம்னும் சொல்லப்படுது. அதோடு, கட்டம் கட்டப்பட்ட சசிகலா சொந்தக்காரங்க இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்காங்கன்னும் ரிப்போர்ட் எடுக்கப்படுதாம். ஜெயா டி.வி. பாஸ்கரன், தான் நடிக்கிற தலைவன் படத்தின் சார்பில் ஜெ.வை வாழ்த்தி  நமது எம்.ஜி.ஆரில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்த விளம்பர நிர்வாகியை தூக்கிட்டாங் களாம். உளவுத்துறை இதுபோன்ற ரிப்போர்ட்டுகளில்தான் பிஸியா இருக்குது.''

""அதிரடி நியூஸ் நிறைய கொடுத்தீங்க.. நான் ஒரு சென்ட்டிமென்ட் நியூஸ் சொல்றேன். விஸ்வரூபம் படத்தில் முதலீடு செய்த அளவுக்கு இன்னொரு மடங்கு பணத்தை லாபமா பார்த்துட்டாரு கமல். பல  நெருக்கடிகளைத்தாண்டி கமல் ஜெயித்திருக்கிற நேரத்தில் ரஜினியும் அவருக்கு நெருக்கமான ஒரு பத்திரிகைகாரரும் கமல் வீட்டுக்கு நேரில் போய் வாழ்த்து சொல் லிட்டு, கிடைச்ச பணத்தில் சொத்துகளை மீட்டு உங்கள் பிள்ளைகள் பேரில் எழுதி வையுங்க. இனிமேல் இப்படி ரிஸ்க் எடுக்காதீங்க. சொந்தமா  படம் தயா ரிக்கவேண்டாம். யாராவது புரடி யூசரைப் பிடித்து உங்களுக்குப் பிடிச்ச கதையில் நடிங்கன்னு சொல்லிட்டு வந்திருக்காங்க.''
படங்கள் : ஸ்டாலின்

 லாஸ்ட் புல்லட்!

மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு  மாதத்திற்கு மேல் உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளை, போலீசார் அதிரடியாகத் தூக்கிச் சென்ற போது உடனிருந்தவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அரசுத் தரப்பிலிருந்து அவருடைய கோரிக்கையைக் கேட்க யாரும் வராத நிலையில், அமைச்சர் நத்தம் விசுவநாதனை அவரது ஆதரவாளர்கள் பார்க்கச் சென்றபோது, யாராவது உண்ணாவிரதம் இருந்தா இப்படி கிளம்பி வந்துடுவீங்களா என்று அமைச்சரின் பி.ஏ. விரட்டியிருக்கிறார். நீண்ட போராட்டத் திற்குப்பிறகு அமைச்சரைப் பார்த்தபோது அவரும், நீங்களெல்லாம் தூண்டிவிடு றீங்களா? இன்னைக்கு சசிபெருமாள், நாளைக்கு பெத்தபெருமாள்னு யாராவது வந்துக்கிட்டுத்தான் இருப்பாங்க. சனி-ஞாயிறு இரண்டு நாட்களும் அதிகாரிகள் லீவு. யாரும் பார்க்க வரமாட்டாங்க என்று சொல்லி டென்ஷனாக்கியுள்ளார். கடைசியில் கோரிக்கை நிறைவேறாத நிலையிலேயே சசிபெருமாள் தன்  உண்ணாவிரதத்தை கைவிடவேண்டியதாயிற்று. அவரது உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லி நேரில் சென்று சந்தித்த சில தலைவர்களும்கூட, அவருக்கு இடம் கொடுத்தவரிடம், எதற்கு ரிஸ்க்? அரசாங்கத்தைப் பகைச்சுக்கணுமா? கைவிடச் சொல்லுங்க எனக் காதைக் கடித்துள்ளனர்.

சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட 3 அமைச்சர்களில் டாக்டர் விஜய்யை ஏற்கனவே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சி.பி.ஐ.யின் பார்வை இன்னும் தீவிரமாகியிருக்கிறது. விஜய்யிடம் ஆபிஸ் அசிஸ்டென்ட்டாக இருந்த சரவணன்தான் அங்கே ஆல் இன் ஆலாம். வாரம் 25எல் மந்திரிக்கு, மீதி வருமானமெல்லாம் தனக்கு என செயல்பட்ட சரவணன் பெயரில் கர்நாடகாவில் பல கோடி நிலம் வாங்கப் பட்டிருப்பதை சி.பி.ஐ. ஆவணங்களோடு பிடித்துள்ளதாம். 

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அழகிரி ஆதரவாளர்களைத் தொடர்ந்து, ஸ்டாலின் ஆதரவாளர்களிடமும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது போலீஸ். மா.செ.தளபதி போலீசில் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டு திரும்ப, முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், தொண்டரணி சோலை ரவி, பொட்டு தம்பி சரவணன், பினாமி பாலதம்புராஜ் உள்பட பலரும் விசாரணைக்கு ஆளாகியுள்ளனர். கேட்ட கேள்விகளையே விசாரணை அதிகாரி தொடர்ந்து கேட்பதால், மறுபடியும் மொதல்ல இருந்தா என ஆடிப்போயுள்ளனர் உ.பிக்கள்.



4-ம் தேதி இலங் கைத் தூதரகம் முன்பு வைகோ, நெடுமாறன், வேல்முருகன், இன உணர் வாளர்களுடன் திரள, வழக் கறிஞர்கள் கோர்ட்டுகளை புறக்கணிக்க, தமிழகமெங் கும் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட அன்று மதியம் 12.50-க்கு நல்லவாடு கிரா மத்தைச் சேர்ந்த மணி, கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன் டூவீலரில் வந்து இறங்கினார். அவர் உடல் முழுக்க பெட்ரோலால் நனைந்திருந்தது. சட்டென தான் கொண்டு வந்திருந்த காகிதங்களை பரவலாக இறைத்தவர், "தமிழீழத்தை மீட் போம்! கொலையாளி ராஜபக்சேவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவோம்'’என கோஷம் எழுப்பியபடி நொடியில் தீக்குச்சியை உரசி தன்மேல் வைத்துக்கொண்டார். அந்த வழியாக நடந்து சென்றவர்களும் வாகனவாசிகளும் இதை கண்டு அதிர்ந்துபோய் நிற்க... மணி, கொளுந்துவிட்டு திகுதிகுவென எரிந்தார். 

சுதாரித்துக்கொண்ட மக்கள் 108-ஐ அழைக்க, விரைந்துவந்த ஆம்புலன்ஸ், அந்த வேதனையிலும் ‘"ராஜபக்சே ஒழிக ராஜபக்சே ஒழிக' ‘என முனகியபடியே கருகிக் கிடந்த மணியை மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு போனது.

இறைந்துகிடந்த அந்த துண்டுத் தாள்களில் ஒன்றை எடுத்துப் பார்த்தோம். அதில் ஜனாதிபதி முதல் தலைமை நீதிபதி, மீடியாக்காரர்கள்வரை குறிப்பிட்டு விட்டு "நான் இந்திய மண்ணில் தமிழனாக பிறந்ததை மிகவும் பெருமையாக நினைக் கிறேன். எமது தாய், தந்தை, சகோதர- சகோ தரிகள் உட்பட பச்சைக் குழந்தைகளையும் கொன்று குவித்த இலங்கையின் வெறிநாய் ராஜபக்சே, ஒரு கொடூர மிருகம்'’ என சாடிவிட்டு, அமெரிக்கா கொண்டு வரும் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாகத் தன் உயிரைக்கொடுப்பதாக தெரிவித்திருந்தார் மணி. மருத்துவமனையில் இருந்த மணியைப் பார்த்தோம். ‘"ராஜபக்சேவை விடக்கூடாது. அவனை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண் டும்' என்றவர், உயிருக்குப் போராடிய நிலையில் திங்கள் இரவு உயிரிழந்தார். 

ad

ad