புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2013




       ""ஹலோ தலைவரே... ப.சிதம்பரம் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டைப் பார்த்தீங்களா?''

""பார்த்தேம்ப்பா.. எம்.பி. தேர்தல் எப்ப வந்தாலும் சமாளிக்கிறதுக்குத் தகுந்த மாதிரி ஜாக்கிரதையா பட்ஜெட் போடப்பட்டிருக்குது.''nakeeran

""ப.சி. ரொம்பவே பேலன்ஸ் பண்ணி யிருக்காருன்னு பொருளாதார நிபுணர்கள் சொல்றாங்க. பெரிய திட்டங்கள் கிடையாது. பெரியளவில் வரிகளும் கிடையாது. மான்யத் தொகையை நேரடிப் பணமா கொடுக்கும் திட்டத்தில் கவனம், எரி பொருள் மான்யம் குறைப்பு, சினிமாவுக்கு சேவை வரி ரத்து, செட்டாப் பாக்ஸுக்கு வரி, பெண்களுக்கு தனி வங்கி, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி குறைப்பு, கல்வி-தொழில்- அந்நிய முதலீடு இவற்றில் கவனம்னு ஒரு கலவையா இருக்குதுங்க தலைவரே..''

""வழக்கம்போல் ஆளுந்தரப்பு இந்த பட்ஜெட்டை வர வேற்றும் எதிர்த்தரப்பு குற்றம் சாட்டியும் அறிக்கைகள் விட்டு, சம்பிரதாயத்தை முடிச்சிட்டாங்கப்பா.'' 

""தலைவரே.. பிப்ரவரி 27-ந் தேதி விவேகானந்த ரோட 150-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஜெ., தனக்கு குடும்பம் எதுவுமில்லைங் கிறதையும் மக்களுக்காகத் தான் தன்னோட வாழ் வுன்னும் பேசினாரு. அதே நேரத்தில், 24-ந் தேதி சிறுதாவூர் பங்களா வில் நடந்த ஜெ. பிறந்த நாள் விழாவில் வழக்கம் போல் சசிகலா உடனிருந் தார். அதுமட்டுமில்லை, முன்பு கட்டம் கட்டப்பட்ட வர்களில் நடராஜன் உள்ளிட்ட சிலர் தவிர மற்ற எல்லோரும் நேரில் ஆஜராகி, ஜெ.விடம் ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டாங்க. விருந்து ஏற்பாடுகளும் தடபுடலா நடந்தது. எல்லோரும் உற்சாகமா கலந்துக்கிட்டாங்க.''

""நல்ல நாளில் எல்லோரும் ஒன்றுகூடுவது வழக்கம்தானே.. அரசியல் மூவ்கள் ஏதாவது உண்டா? மறுபடியும் மந்திரிசபை மாற்றப்பட்டதன் பின்னணி இங்கிருந்து ஆரம்பமா?''

""அது, கொடநாட்டில் ஜெ. இருந்தபோதே ஆரம்பிச்சிடிச்சி. அப்போதே மந்திரிகள் பற்றி ரிப்போர்ட் கேட்டு வாங்கியிருந்தார்னு நம்ம நக்கீரன் சொல்லியிருந்தது. திரும்பவும் இப்போதும் ஒரு ரிப்போர்ட் வாங்கியதன் விளைவுதான், 3 பேர் நீக்கப்பட்டு, 3 பேருக்கு புது வாய்ப்பு கிடைத்திருக்குது. ஆனா, கே.பி.முனுசாமியையும் பழனியப்பனையும் நீக்கணும்னு சசிகலா தரப்பிலிருந்து பிரஷர் கொடுக்கப்பட்டிருக்கு. அவங்க இந்த முறை தப்பிச்சிட்டாங்க. கே.பி.முனுசாமிக்கு கூடுதல் பொறுப்பும் கிடைத்திருக்கு. வேறு 2 பேர் மாற்றப்பட்டு, அதுபோல சசிகலா தரப்புக்கு அதிக தொடர்பில்லாத 2 பேர் மந்திரியாகியிருக்காங்க.'' 

""கட்சிப் பதவிகளிலிருந்தெல்லாம் பலர் தூக்கப்பட்டிருக்காங்களே…!''

""அதற்கு நால்வர் அணிதான் காரணமாம். ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இந்த நால்வர் அணி ஒவ்வொரு எம்.பி. தொகுதியா செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியபோது, சரியா ஏற்பாடு செய்யாதவர்கள் பற்றி மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தது. அதன்படிதான் நிர்வாகிகள் மாற்றப்பட்டிருக்காங் களாம். திருச்சி புறநகரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் சிவபதி சரியா செயல்படலைன்னு இந்த நால்வர்அணி அனுப்பிய ரிப்போர்ட்தான் அவரோட அமைச்சர் பதவிக்கும் கட்சிப் பதவிக் கும் வேட்டு வைத்ததாம். பழைய மா.செ.க்கள் தூக்கப்பட்டு, புது மா.செ.க்களும் போடப்பட் டிருக்காங்க. இந்த புது மா.செ.க்கள்தான் எம்.பி. தேர்தலில் அ.தி.முக. வேட்பாளர்கள்னு பேச்சு அடிபடுது. நால்வர் அணி கலக்க, கட்சிக்காரர்கள் கதிகலங்கியிருக்காங்க.''

""மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் பற்றி உளவுத் துறையும் ரிப்போர்ட் கொடுக்கும்ல..''

""அவங்களும் சீரியஸா ஒர்க் பண்ணிக்கிட்டுத் தான் இருக்காங்க. உளவுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டி.ஜி.பி. ராமானுஜத்தோட எக்ஸ்டென்ஷன் ஃபைல் மத்திய அரசிடமிருந்து க்ளியர் ஆகாததால, பிப்ரவரி 28-ந் தேதி ரிடையர்டாகப் போறாருன்னு தகவல் பரவிக்கிட்டிருந்தது. எக்ஸ் டென்ஷன் தொடர்பா சுப்ரீம்கோர்ட்டில் சில வழக்குகள் இருக்கிறதால மத்திய அரசு இந்த ஃபைல் மீது எந்த  முடிவும் எடுக்கலை. அதே நேரத்தில், தற்போதுள்ள நிலையே நீடிப்பதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னும் சொல்லி டிச்சி. அதனால, மத்திய அரசின் எக்ஸ்டென்ஷன் ஆர்டர் இல்லாத நிலையிலும் டி.ஜி.பி. தன்னோட பதவியில் தொடர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.'' 

""தி.மு.க.வில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினோட 61-வது பிறந்தநாள், அதாவது மணிவிழாவை பிப்ரவரி 28-ந் தேதியிலிருந்தே கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்களே.''…


""ஆமாங்க தலைவரே.. மு.க.ஸ்டாலினோட பிறந்தநாளான மார்ச் 1-ந் தேதியை தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு அவருக்கு மணிவிழா. முதல் நாளே இளைஞரணி மட்டுமில்லாமல் மற்ற அணிகளின் நிர்வாகிகளும் கட்சிப்பொறுப் பாளர்களும் ஆர்வமா வந்தாங்க. 28-ந் தேதியன்னைக்கு தென்சென்னை தி.மு.க சார்பில் 60 ஜோடி களுக்கு கலைஞர்  தலைமையில் திருமணம் நடந்தது. கலைஞர் பேசுறப்ப, மு.க.ஸ்டாலினை மகனாகப் பெற்றதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காகப் பாடுபடவும், இந்தியாவுக்கே நெருக்கடிகள் வந்தாலும் அதைத் தீர்க்கும் வகையிலும், உலகத் தமிழர்களைப் பாதுகாக்கும் இனஉணர்வுடனும் உள்ள பலர் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் மு.க.ஸ்டாலின். அவர் மீதான தியாகத் தழும்பு       களை வரலாற்றுப் பகுதிகள் எடுத்துக்காட்டும்னு சொன்னார்.''

""மு.க.ஸ்டாலினோட மணிவிழாவின் ஹைலைட்டான வாழ்த்துன்னு இதைச் சொல்லலாமா?''

""தி.மு.க தொண்டர்கள் அப்படித்தான் நினைக் கிறாங்க. மணிவிழா என்பதால மார்ச் 1-ந் தேதி ஸ்டாலின்-துர்கா தம்பதியினருக்கு 60ஆம் திருமணம். அதைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் தொண் டர்களின் வாழ்த்து மழை. ஆடம்பர செலவு செய்யா மல் மக்கள் நல உதவிகளை செய்தும், தேர்தல் நிதி வழங்கியும் கொண்டாடுங்கள்னு ஏற்கனவே ஸ்டாலின் அறிக்கை கொடுத்திருந்தார். அதனால நிதி குவிந்தது. பல இடங்களில் நல  உதவி விழாக்கள் நடந்தது. எல்லா இடங்களிலும் ஸ்டாலின் படத்தோடு அவரது மனைவி படத்தையும் சேர்த்து போஸ்டர், பேனர்னு அசத்தியிருந்தாங்க.''

""அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலையிலும் தி.மு.க அசத்த, பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுக்கிட்டிருக்குதே.''…

""ஆமாங்க தலைவரே.. அவதூறு வழக்குக்காக தஞ்சை, திண்டுக்கல்னு பல கோர்ட்டுகளிலும் விஜயகாந்த் நேரில் ஆஜராகிறார். அதே நேரத்தில், தே.மு.தி.க.வின் வாக்குவங்கி என்பது தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை கொண்ட பழைய அ.தி.மு.க. அனு தாபிகளின் வாக்குகள்தான் என்பதால், தே.மு.தி.க.வின் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி  கட்சி நிர்வாகிகளையும் அ.தி.மு.க. பக்கம் இழுக்கணும்னு கார்டனிலிருந்து ஸ்பெஷல் அசைன்மெண்ட்டே கொடுக்கப் பட்டிருக்குதாம்.''

""ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் விலகிய நிலையில் இப்போது செங்கம் எம்.எல்.ஏ. சுரேஷ்குமாரும் ஜெ.வை சந்தித்திருக்காரே.''…


""தன்னோட தீவிர ரசிகரான சுரேஷ்குமார் அந்தப் பக்கம் போன தில் விஜயகாந்த் படு அதிர்ச்சியாம். திருவண்ணாமலை மாவட்ட தே.மு.தி.க அடையாளமா இருந்தவர் அவர்.  4 எம்.எல்.ஏக்கள் அணி மாறுனப்ப இவர் கேப்டன் டி.வியில் வெளுத்து வாங்கியவர். அவரா இப்படின்னு விஜயகாந்த்துக்கு ஷாக். காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்டதற்காக ஜெ.வுக்கு நன்றி தெரிவித்தேன்னு சுரேஷ்குமார் பேட்டி கொடுத்ததும், செங்கத்தில் எங்கே காவிரி ஓடுதுன்னு கட்சிக்காரங்க கிட்டே பிரேமலதா கமெண்ட் அடிச்சாராம். லோக்கல் கட்சிக்காரர்களோ, சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை இவரை ஆஃப் பண்ணியிருந்தார். அதையும் மீறி ஜெயிச்சவர், காற்றடிக்கிறப் பக்கம் போயிட்டாருன்னு சொல்றாங்க. அமைச்சர்கள் முக்கூர் சுப்ரமணியும், முகமது ஜானும்தான் இவரை அ.தி.மு.க பக்கம் இழுத்திருக்காங்க. இதேபோல மந்திரி கே.பி.முனுசாமி, சேலம் அ.தி.மு.க நிர்வாகிகள், மற்ற மாவட்ட நிர்வாகிகளும் தே.மு.தி.கவினருக்கு வலை வீசுவதில் தீவிரமாயிட்டாங்க.''


""நான் ஒரு தகவல் சொல்றேன். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவை ஒரேயொரு தடவை மன்னிச்சி விட்டுடச் சொல் லியும் அவரை நீக்கியதால் ராகுல் மேலே படு கடுப்பா இருக்காராம் ஜி.கே.வாசன். இப்படி செய்தால், தனக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லைன்னு என் ஆதரவாளர்களும் எதிர்க்கோஷ்டியினரும் நினைக்க மாட்டாங்களான்னு அகமது பட்டேல்கிட்டே முறையிட்டி ருக்காரு. வாசன் இந்த விவகாரத் தை சோனியா கவனத்துக்கு கொண்டு போயிருந்தால் சரி பண்ணியிருக்க லாம்னு விவரமறிந்த காங்கிரசார் என்கிட்டே சொன் னாங்க.''

 லாஸ்ட் புல்லட்!

வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் கொலை வழக்கை விசாரிக்கும் ஸ்பெஷல் சி.பி.ஐ. டீமுக்கான பொறுப்பு முன்னாள் இயக்குநர் ராகவனிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான டீம் பிப்ரவரி 14-ந்  தேதி நியமிக்கப்பட்டுள்ள போதும் விசாரணை தொடங்க வில்லை. டி.எஸ்.பி வி.சுதாகர், உதவி கமிஷனர் ஆர்.வேதரத்தினம் உள்பட டீமில் உள்ள அனைவருக்கும் தற்காலிக பணியே வழங்கப் பட்டிருப்பதால் விசாரணையை முழுமையாக மேற்கொள்ள முடியாது என விசாரிக்க மறுப்பு சொன்னதே இதற்கு காரணம். முழு நேரப் பணியாக இதனைத் தரவேண்டும் என்கிறார்கள் காக்கி அதிகாரிகள். 

பா.ம.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி மூவ் மேற்கொண்டிருக்கும் சூழலில் மேலும் ஒரு முன்னேற்றம். வன்னியர் அறக்கட்டளை சார்பாக சட்டக்கல்லூரி ஆரம்பிப்பதற்கு முந்தைய தி.மு.க அரசு சாதகமாக செயல்படவில்லை என கோர்ட்டுக்கு சென்றது ராமதாஸ் தரப்பு. அனுமதி தரச்சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. தற்போது, அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் போகலாமா என அரசு வக்கீல்கள் ஆலோசனை கேட்டதற்கு, வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம் ஜெ. சீக்கிரம் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது பா.ம.க.

ad

ad