புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக  தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு  அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல்
டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று சனிக்கிழமை தொடங்குகின்றது.

சென்னை டெஸ்டில் வெற்றி பெற்றது போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமா ? என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் தோற்றதால் அவுஸ்திரேலியாவை வெல்ல வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய மண்ணில் 4 டெஸ்டிலும் தோற்றதால் அதற்குப் பதிலடியும் கொடுக்க வேண்டிய நிலையும் இந்திய  அணிக்கு இருக்கிறது. ஐதராபாத் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக் குறைவே. வெற்றி பெற்ற அணியே தொடர வேண்டும் என்று தோனி கருதுகிறார். இதனால் ஓஜாவுக்கு வாய்ப்புக் கிடைக்குமா? என்பது சந்தேகமே.

சென்னை டெஸ்டில் ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சு எடுபடவில்லை. அவர் 3 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார் என்றாலும் தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்கலாம். ரவீந்திர ஜடேஜா இடதுகை  சுழற்பந்து வீரர் இதனால் மற்றொரு இடதுகை சுழற்பந்து வீரரான ஓஜாவை  சேர்க்க தோனி யோசித்து வருகிறார். ஹர்பஜன்  நீக்கப்பட்டால் ஓஜா இடம்பெறுவார். 

தொடக்க வீரர்களான ஷேவாக், முரளி விஜய் சென்னை  டெஸ்டில் ஏமாற்றமளித்தனர். என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

முரளி விஜய் நீக்கப்பட்டால் ஷிகார் தவான் டெஸ்டில் அறிமுகமாகலாம். ஷேவாக் இந்த டெஸ்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அணியிலிருந்து நீக்கப்படுவார். இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் கப்டன் தோனி நல்ல நிலையில் உள்ளார். சேப்பாக்கத்தில் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்தார். டெண்டுல்கர், வீராட் கோலி, புஜாரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.  பந்து வீச்சில் அஸ்வின் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் சென்னை டெஸ்டில் 12 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரே ஒரு சுழற்பந்து வீரரான லயனை மட்டும் வைத்து ஆடியது. இந்த டெஸ்டில் கூடுதலாக இன்னொரு சுழற்பந்து வீரரான டோகர்ட்டியை சேர்ப்பது தொடர்பாக அவுஸ்திரேலியா ஆலோசனை செய்து வருகிறது.

2 சுழற்பந்து வீரர்கள் இடம்பெற்றால் வேகப்பந்து  வீரர்களில் ஒருவர் (சிடில் அல்லது ஸ்டார்) நீக்கப்படுவார். கப்டன் கிளார்க் மட்டுமே துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளார்.  
இதனால் மற்ற அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களும் போராடுவார்கள்.

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடித்ததால் இந்தப்  போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் பொலிஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ad

ad