புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2013




இன்றைய ஜெனீவா   ஐ நா சபை நோக்கிய தமிழர் பேரணி அந்த மாநகரையே அதிர வைத்தது இலங்கையின் அடாவடித்தனம் நீடித்தால் பொதுநலவாய அமைப்பு, ஐநா அமைப்பிலிருந்து விலக்கப்படும்! ஐநாவில் ஜிம்கரியானஸ் பா.உ
இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து தமக்கென ஒரு தனியான  தொடரூந்தையே ஒழுங்கு பண்ணி வந்த பிரான்ஸ் தமிழரின் வருகை ஜெனீவ தொடரூந்து நிலையத்தை முற்றுகையிட்டது வெளியிலே சுவிஸ் மற்றும் ஐரோப்பா எங்கணும் இருந்து வந்த பேரூந்துகள்  தமிழரை சுமந்து வந்து கொட்டி தள்ளின.பார்க்கும் இடமெங்கும் கருப்பு தலைகள் அனால் கைகளில் செவ்வண்ண புலிக்கொடிகள் 
இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக தமிழ் நாட்டு மருத்துவ பேராசிரியர் தாயப்பன் கலந்து கொண்டதுடன், கனடா நாட்டின் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழருக்காக குரலுமான ஜிம் கரியானஸ் வழங்கிய தனதுரையில்,
தமிழர்களாகிய உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்பதில் மிகுந்த மகிழ்சி அடைகிறேன். இலங்கையரசின் இனப் படுகொலையை உங்களோடு இணைந்து நாமும் எதிர்க்கிறோம். அந்த அரசு தொடர்ந்து இந்த நிமிடம் வரை தமிழர்கட்கு இன்னல்களையே செய்து வருகிறது.
இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் தெரியாத இவ் அரசிற்கு ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் செயற்பாடுகளில் கண்ட கணவுள்ள படு தோல்விகளை இச் சிறிலங்கா அரசு நன்கறியும்.
இந்நிலை நீடிக்குமானால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதுடன் என்றும் எம் உறவுகளாம் உங்களின் போராட்டத்திற்கு எம் தார்மீக ஆதரவு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவர்களுடன் பிரான்ஸ் நாட்டு மாநகர சபை உறுப்பினர்கள், இத்தாலி நாட்டு மனித உரிமை ஆர்வலர், பல நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் நாட்டு உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad