புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


ஜெனீவாவில் நவநீதம்பிள்ளையுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது அலுவலக அதிகாரிகளுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நவநீதம் பிள்ளையின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (04-03-2013) இடம்பெற்றது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலக உயர்மட்ட அதிகாரிகளான ஆசிய,பசுபிக், மத்திய கிழக்கு, வடஆபிரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் திரு. ஹனி மெகலி மற்றும் தென் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான திரு றோறி மொங்கோவன் ஆகியோரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத் தமிழர்களது ஆதரவாளருமான ஐிம்கனிபியானிஸ் மற்றும் சிலர் சென்று சந்தித்தனர்.
சந்திப்பின்போது இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை தேவை என்றும். அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு சாட்சியமளிக்க வி்ரும்பும் மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிப்பதற்கும் , சாட்சியங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் ஓர் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவும், தற்போதும் தொடர்ந்தும் இடம்பெறும் இன அழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும் ஏதுவாக சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு வெளி்யே இடைக்கால நி்ர்வாகம் ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் அது தொடர்பாகவும் நவநீதம்பிள்ளை அம்மையார் நடவடிக்கை எடுத்து எமது மக்களை அழிவிலிருந்து உடனடியாகக் காப்பாற்ற வேண்டுமென்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த வருடம் ஐநாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்றும் மாறாக தமிழ் மக்கள் மீதான அழிப்பை தீவிரப்படுத்துவதற்கான கால அவகாசத்தினையே அரசுக்கு வழங்கியுள்ளது என்றும், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை என்பதில் எந்த பயனும் இல்லை மாறாக சர்வதேச விசாரணை ஒன்றே தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad