புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013


யாழ்ப்பாண ஊடகங்களுக்கு இல்லையாம் தெற்கு ஊடகங்களுக்கு தானாம் அனுமதி
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் முழுமையாக செய்தி சேகரிப்பதற்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது. 


யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் வைபவ ரீதியாக நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

இதனையடுத்து காணி சுவீகரிப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன் வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் தெற்கில் இருந்து செய்தி சேகரிப்பதற்காக வந்த ஊடகங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டன.

ஆயினும் ஊடகவியலளாளர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்ற காரணங்கள் எதுவும் சரியாக கூறப்படவில்லை.

தெற்கு ஊடகங்களுக்கு மட்டும் தானா அனுமதி என்று யாழ் ஊடகவியலாளனர்கள் கேட்ட போது உள்ளே இருப்பவர்கள்  ஊடகங்கள் அல்ல அமைச்சுக்களின் ஊடகவியலாளர்கள் என்று பதில் வழங்கப்பட்டது.

அத்துடன் அவர்கள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர் நீங்கள் எதை வைத்து அடையாளப்படுத்துகின்றீர்கள். நாங்கள்  சொன்னதைத் தான் செய்கின்றோம் உங்களை உள்ளே அனுப்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது என்றனர்.

தற்போது யாழ்.மாவட்டத்தில் தெற்கில் இருந்து பல்வேறு அமைச்சர்கள் வந்து நடாத்தப்படும் நிகழ்வுகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் தெற்கு ஊடகங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதுடன் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டு வருகின்றது. இதனால யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு தமது பிரதேசங்களில் சுதந்திரமாக செயற்படுத்துவதற்கு முடியாது போகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். 

ad

ad