புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


“இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள்”- டெல்லியில் டெசோ கூட்டம் ஆரம்பம்
டெல்லியில் இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.இதில் முன்னாள் மந்திரிகள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி., கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், சித்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
“இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள்” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், மு.க.ஸ்டாலின் தலைமை உரையைத் தொடர்ந்து சனல்- 4 தயாரித்த ‘நோ பயர் சோன்’ ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
அதன்பின்னர் டெசோ வரைவு தீர்மானம் மீதும் தலைவர்கள் விவாதம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-  மு.க. ஸ்டாலின்
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் டெசோ அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைமை உரையாற்றியபோது, இந்தக் கருத்துகளை ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சனல் 4 தொலைக்காட்சியின் " நோ பயர் ஸோன்" ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இந்தக் கருத்தரங்கில் திரையிடப்பட்டன.
ஈழத் தமிழர் பிரச்சினையை பிற மாநிலத்தவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவதாக டெசோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சுயேச்சையான ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று, டெசோ கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

ad

ad