புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013


திருப்பதி : இலவச தரிசன பக்தர்கள் இனி கூண்டுக்குள் காத்திருக்க வேண்டியதில்லை

திருமலையில் தரிசன முறை பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1 மற்றும் 2-ல் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா கலந்து கொண்டு பேசியதாவது:- 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. பிரிவுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்போது, கட்டாயமாக தங்களின் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அந்த அடையாள அட்டைகளை கோவில் ஊழியர்கள் முறையாக பரிசீலனை செய்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்ப வேண்டும். 

சிபாரிசு கடிதங்கள் கொண்டு வரும் பக்தர்களும் கட்டாயமாக அடையாள அட்டையுடன் வர வேண்டும். வி.ஐ.பி. தரிசன முறை கிரேடு-1, கிரேடு-2, கிரேடு-3 என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் கொண்டு வரும் பக்தர்களுக்கு கிரேடு-3 தரிசனம் வழங்கப்படும். 

கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சன சேவை, அபிஷேக சேவை, அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, சகஸ்கர கலசாபிஷேக சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகளில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக அடையாள அட்டையுடன் வர வேண்டும். 

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்ட்டுகளில் 500 பேருக்கு மேல் வைக்கக் கூடாது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்பட்டு உள்ள பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஆவதால், அவர்களுக்கு தரிசனம் செய்யும் நேர விவரம் பற்றி புகைப்படத்துடன் கூடிய அடையாள அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டை பெற்று, பக்தர்கள் வெளியே சென்று விட்டு தரிசன நேரத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சிற்குள் செல்லலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad