புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013


போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே..
மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள்
தான் விளங்குகின்றன. போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்கிற உன்னத மொழிக்கேற்ப ஈழ விடுதலைக்காக தன் வயிற்றில் பசி என்னும் நெருப்பினை சுமந்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்கிற தெளிவாக முழக்கத்தோடு , மரணத்திற்கு அஞ்சாமல் போராடும் உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது. 

அறவழியில் நின்று ஒருமித்த குரலில் நீங்கள் விடுக்கிற விடுதலைக்கான அறைகூவல், இனப்படு கொலைக்கு எதிரான முழக்கம் போன்றவை ஈழ விடுதலைப்பயணத்தில் மைல் கற்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்பதை உணர்ந்து தன்னலம் துறந்து இனநலன் காக்க போராட்டக்களத்தில் துணிந்து நிற்கிற சட்டக்கல்லூரி, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லூரி உள்ளீட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது போராட்டம் வெல்லட்டும். நமது மற்றொரு தாய் நிலமான தமிழீழத்திற்கு விடுதலையின் ஒளி கிடைக்கட்டும்.


மேலும் தமிழக மாணவர்களோடு  போராட்டக் களத்தில் திரண்டிருக்கும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் உள்ளீட்ட  அனைத்து ஆதரவு சக்திகளுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்க கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் தமிழக கல்லூரி மாணவர்களை தமிழக அரசு உள்ளாக்கக் கூடாது என்றும்  நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும்  உறுதியாக தெரிவித்து கொள்கின்றேன்’’என்று தெரிவித்துள்ளார்.
                                                                                      

ad

ad