புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


ரொறன்ரோவில் இலங்கை தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு
பாலச்சந்திரன் படுகொலையினை கண்டித்தும் சிங்களப் படையின் இன அழிப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவற்றை கண்டித்து மகிந்த ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கோரி கடந்த திங்களன்று கனடா ரொறன்ரோவில் உள்ள  இலங்கைத் தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் வேலை நாளாக இருந்த போதும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாது முதியோர் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இப் பேரணி மாலை 3.00 மணி முதல் இரவு 7.00மணி வரை நடைபெற்றது. ரொறன்ரோவில் யங்வீதி – எக்லின்ரன் வீதிச் சத்திப்பின் அருகாமையில் எக்லின்ரன் வீதியில் ஒதுக்கப்பட்ட இடம் போதாமையால் மிகவும் சன நெரிசல் உள்ள வீதியாக இருந்தும் கூட காவற்துறையினர் எகலின்ரன் வீதியின் ஒரு பகுதியை மூடி ஊர்வலமாகச் சென்ற மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
Sri Lanka – #1 Offender
of Human Rights
21st Century – Hitler
Sri Lankan President
Kick Sri Lanka Out of
Commonwealth & UN
Time for Strong Action
Against Sri Lanka
Put Sanctions
Against Sri Lanka
போன்ற கோசங்களை மக்கள் உணர்ச்சியுடன் எழுப்பியவாறு சென்றனர்.
ஊர்வலம் மாலை ஏழு மணிக்கு உறுதி மொழியுடன் நிறைவுற்றது.
அன்று பொங்கியெழுந்தோம் போராட.. இன்று புயலாய் வருவோம் நீதி கேட்க..

ad

ad