புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை!
இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அமைக்கப்பெற்ற மக்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக பாவித்து ஒட்டு மொத்த தமிழர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியது,
சர்வதேச போர் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தியது,
போர் விதிகளுக்கு மாறாக பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்களை கொன்றதுடன், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சுதந்திரமான பன்னாட்டு விசாரணை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வலுச்சேர்க்கும் வகையிலும் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மக்கள் நீதிமன்றம் அமைத்து ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதியரசர் ஆh.ஜி.ரத்னகுமார் முன் விசாரணை நடைபெற்றது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், ஈழப் பகுதிகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது கொடிய விஷமுள்ள இரசாயன குண்டுகளை வீசி கதற கதற கொன்றுள்ளார். எஞ்சிய பெண்களை அவரது இராணுவம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
இவர்களது கொடூரம் தாங்காமல் இறந்த பெண்களையும் விட்டு வைக்காமல் பிணத்தின் மீதும் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டு அவற்றை படங்களாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
என் தமிழின பெண்களை பெண் போராளிகளை உடைகளை களைந்து தெருவில் ஓட விட்டு சிங்கள காடையர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துள்ளனர்.
அப்பாவி சிறுவர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இப்போது உலகம் எங்கும் புகைப்படங்களாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆகவே இந்த இன அழிப்பு செய்த கொடூரனை இந்த மக்கள் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். இந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை உலக மக்களே எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று வாதிட்டார்.
ராஜபக்சவுக்காக ஆஜரான வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் மற்றும் இந்திய அரசுக்காக ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்மோகனும்,
தமிழர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதங்கள் அத்தனையும் தவறானது. நீதியரசர் அவர்கள் இறுதி தீர்ப்பு சொல்லும் முன்பு நடந்த உண்மைகளை இந்திய அரசிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு தீர்ப்பினை சொல்ல வேண்டும். இந்திய அரசு இலங்கையில் குற்றமே நடக்கவில்லை என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சொல்கிறது என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மக்கள் நீதிமன்ற நீதியரசர் ரத்னகுமார், ராஜபக்சே நடத்திய இருப்பது இன அழிப்பிற்கான கொடூர கொலைகள் தான் என்பது ஆதரங்களும், சாட்களின் அடிப்படையில் நிரூபணம் ஆகிறது.
பெண்களை வன்புணர்ச்சி செய்து படம் எடுத்ததும் குற்றம், சின்னக் குழந்தைகளை கொன்றது குற்றம், பாதுகாப்பு வலயம் என்று சொல்லி பொதுமக்களை ஒரே இடத்தில் குவியச் சொல்லி அந்த இடத்தில் இரசாயன குண்டுகளை கொட்டி ஒட்டு மொத்தமாக பொதுமக்களை அழித்தது பெருங்குற்றம்.
தடயங்களை அழிக்க முயன்று தோற்றும் உள்ள இனப் படுகொலை செய்த ராஜகப்சவுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
இந்த கொடூர கொலைகளுக்கு துணை போன உலக நாடுகளுக்கு என்ற தண்டனை கொடுப்பது என்பது பற்றி மற்றொரு நாளில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி முடிவெடுக்கும் என்று வரலாற்று தீர்ப்பினைச் சொல்லி முடித்தார்.
நீதியரசரின் இந்த தீர்ப்பின் படி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தூக்கு தண்டனையை காளிதாஸ் மற்றும் பலர் மன நிம்மதியுடன் நிறைவேற்றினார்கள்.

ad

ad