புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு 
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும்
வடக்கு கிழக்கு நிலைமைகள், மனித உரிமை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இடம்பெயர் மற்றும் மீள்குடியேற்ற மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் அலிஸ்டயருக்கு விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://onlineuthayan.com/News_More.php?id=703021867701286337#sthash.GGyV82VM.dpuf

ad

ad