புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013



           லங்கைக்கு எதிராக ஜெனீனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் மனித உரிமைகளின் செயற் பாடுகள் குறித்து வருடாந்திர மீளாய்வு கவுன்சிலில் nakeeranவிவாதிக்கப்படும். இந்த வருடத்தின் மீளாய்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வு முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. nakeeran

முதலில் இலங்கை தரப்பில் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்கே,’""இலங்கையில் தனி நாடு அமைக்க தீவிரவாத அமைப்பு போராடியது. அதனை எதிர்த்து 30 ஆண்டுகாலம் நாங்கள் போராடியிருக்கிறோம். முப்பது ஆண்டு காலம் நடந்த கொடிய மோதல் என்பதால் அதன் மூலமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கைக்கு நீண்டகால அவகாசம் தேவை. அதனால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் தேவையற்றது''’என்று நீட்டி முழங்கினார்.

""இதனையடுத்து பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் வாதங்களை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக சீனா, ரஷ்யா, அல்ஜீரியா, பெலாரஸ், கியூபா, பாகிஸ்தான், தாய் லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள், "உள்நாட்டு போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக் கிறது இலங்கை. அதனால் அதனது நிலைகளை சரி செய்யவும் சீர் செய்யவும் நீண்ட கால அவகாசம் இலங்கைக்கு வழங் கப்பட வேண்டும்'’என்று வக்காலத்து வாங் கிப் பேசின. அதேசமயம், அமெரிக்கா மற் றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத் தும், "மனித உரிமை மீறல்கள் குறித்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் கடந்த 3 வருடங்களாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை இலங்கை அரசு. அதனால் இலங்கையை கையாள ஒரு வலைப்பின் னல் அவசியம்'’’என்றன.  இதனையடுத்துப் பேசிய மனித உரிமை அமைப்புகளும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்தன'' என்று விவரித்தனர் மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர் களான தங்கராஜா பழனிவேல் மற்றும் தமயந்தி செல்வராஜ். 

இந்தச் சூழலில் மனித உரிமை கவுன்சிலில் பேசுவதை விரும்பாத இந்திய அரசு, தனது கருத்தினை ஒரு அறிக்கையாக கொடுத்துவிட்டுப் போனது. அந்த அறிக் கையில், "இரண்டாவது காலமுறை ஆய் வறிக்கையை தாக்கல் செய்த இலங்கை அரசுக்கு நன்றி. தமிழர் மறுவாழ்வு பணிக் கான எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்கிற இந்தியா வின் கோரிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பதை பாராட்டுகிறோம். மும்மொழிக் கொள்கைகள் மூலம் மக்களை சமமாக நடத்துகிறது இலங்கை அரசு. மறு வாழ்வு பணிகள், வடக்கு மாகாணத்தில் படைகளை குறைத்தல் உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சிறப்பாக செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது இந்தியா. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணையை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க் கிறோம். தமிழர்கள் மீள் குடியேற்றம், மறுவாழ்வு பணிகள் வேகமாக நடக்கிறது. மறுவாழ்வு பணிகள் தொடர்பான பரிந்துரைகளை அமல்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற வாழ்த்துகிறோம். அரசியல் தீர்வு காணும் பணியை விரைவு படுத்தவும் இந்தியா வலியுறுத்துகிறது' என்று பதிவு செய்திருக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் அந்த அறிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்தோ சர்வதேச விசாரணை தேவை என்பதைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையையும் முன்வைக்காமல் இலங்கைக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்து முடித்தது.

இந்தச் சூழலில், இலங்கைக்கு எதிராக இறுதி வடிவம் பெறும்  தீர்மானம் மார்ச் 20 அல்லது 21-ல் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படு கிறது. "போர்க் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்ற தீர்மானத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு தயாரித்திருந்தது அமெரிக்கா. இதற்கான ஆதரவை அமெரிக்கா திரட்டியபோது, தீர் மானத்தை பலவீனமாக்கும் லாபியில் குதித்தது இலங் கை அரசு. இதன் பலனாக இலங்கையை ஆதரிக்கும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கியூபா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதற்காக அந்தந்த நாடுகளின் அமெரிக்காவிற்கான தூதர்கள் அமெரிக்காவின் வெளியுறவு அதிகாரிகளோடு வாஷிங்டனில் நீண்ட விவாதமே நடத்தி னர். அந்த விவாதத் தில் ரஷ்யாவும் சீனாவும், "இலங் கைக்கு எதிராக சர்வதேச விசா ரணைக்கான முன்மொழிவோ, போர்க்குற்றங் கள் தொடர்பான குற்றச்சாட்டுகளோ எந்த வடி வத்திலும் தீர்மானத்தில் இடம் பெறுவது எதிர்காலத்தில் அது நமக்கெதிராகவே திரும்பும்' என்கிற தொனியிலேயே பேசின. இதனையொட்டியே தனது வரைவு தீர்மானத்தை மாற்றித் தயாரித்தது அமெரிக்கா. அதில் இலங்கையை பாதிக்கும் பெரிய அம்சங்கள் எதுவும் இல்லை. அந்த வரைவு தீர்மானம்தான் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுற்றுக்கு விடப்பட்டு விவாதத்தை எதிர்கொண்டது.

அமெரிக்காவின் தீர்மானம் குறித்து நார்வே ஈழத்தமிழர் அவையின் செய்தித் தொடர்பாளரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் பார்வையாளருமான விஜய் அசோகனிடம் நாம் பேசியபோது,’    ""இப்போது இருக்கும் வடிவத்திலே தீர்மானம் நிறைவேறினால் அது நமக்கு பின்னடைவே. அதனால், வரைவு தீர்மானத்தை திருத்தம் செய்ய புதன் கிழமை வரை கால அவகா சம் இருக்கிறது. அதற்குள் இலங்கையின் இனப்படுகொலை குறித்தும் போர்க்குற்றங் கள் குற்றச்சாட்டுகள் பற்றியும் குறிப்பிட்டு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண் டும், போர்க்குற்றங்களை விசாரிக்க பன் னாட்டு ஆணையம் அமைக்க வேண்டும், இலங்கையின் அனுமதியின்றி சுயாதீனமான விசாரணையை இலங்கையில் மேற் கொள்ள வேண்டும்'' என்பது  தீர்மானமாக நிறைவேற்றினால் மட்டுமே நாம் எதிர் பார்க்கும் நீதி கிடைக்கும். அப்படிப்பட்ட சூழல் ஜெனீவாவில்  இல்லை. அதனால் கொஞ்சம்கூட அலட்டல் இல்லாமல் நிம்மதி யாக இருக்கிறார்கள் இலங்கை அதிகாரி கள்''’என்கிறார் வருத்தத்துடன்.

-இரா.இளையசெல்வன்

ad

ad