புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013

சுவிற்சர்லாந்தில் நாட்டிய மயில்கள் நான்கு நாட்கள் தோகைவிரித்தாடுகின்றன. எதிர்வரும் திங்கள்மாலை முடிவுகள் வெளியாகும். இரவுவேளை நாட்டியமயில் எவர்என்பது தெரிந்துவிடும்.
09.03.தி.ஆ2044-29.03.கி.ஆ2013புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் இலங்கைத்தமிழர்கள் தமிழைமட்டுமல்ல தமிழர்களின் கலைகளையும்
இந்தியாவின் கலைகளையும் தென்னிந்திய வடஇந்திய சினிமாக்கலைகலைளையும் பயின்று வளர்த்து வருவதுடன் நன்கு இரசித்தும் வருகின்றார்கள்.

அதில் சுவிற்சர்லாந்து தமிழ் மக்கள் தமிழ்மொழியுடன் கூடிய ஆர்வமாக இருக்கின்றார்கள்.

அத்துடன் தமிழிசை. தமழிசைக் கருவிகளைக் கற்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இதனை ஊக்கிவிக்கும் பொருட்டு சொலுத்துாண் மாநிலத்தைச் சேர்ந்த தமிழர் நலன்புரிச்சங்கம் ஆண்டுகள் தோறும் போட்டிகளை நடத்துகின்றது.

இசைக்குயில் என்று ஒரு ஆண்டு போட்டியை நடத்தினால் மறு ஆண்டு நாட்டிய மயில் என்று போட்டியை நிகழ்த்துகிறது.

ஒவ்வொரு பிரிவாக குழுக்குழுவாகவும் பெரிய இறுதிப்பிரிவுக்கு தனித்தனியாகவும் பக்கவாத்தியங்கள் பாடகர்பாடகிகளுடன் அரங்கில் மேடையில் போட்டிகள் நிகழும்.

ஆடற்கலையில் எத்தனை விதமான ஆடல்கள் உண்டோ அதிகமான நடனங்கள் இங்கு நிகளும்.

கும்மிநடனங்கள் கொலாட்டங்கள் காவடிகள் கிராமிய நடனங்கள்.இதிலிருந்து இந்தியர்கள் தமதாகவடித்தெடுத்த பரதமெனமாற்றப்பட்ட பரதநாட்டியங்கள் நிகழும்.

சுவிற்சர்லாந்தின் 26 மாவட்ட கலை மாணவிகளும் ஆசிரியர்களின் பயிற்களுடன் களமிறங்குவார்கள்.

இது யாழ் நல்லுார் திருவிழாக்காலம் போல் சுவிற்சர்லாந்து தமிழர்களை பண்பாட்டுக் கோலாகல மாக மாற்றிவிடும்.

ஆகாக ஆகாக பெண்பிள்ளைகள் தாவணிகள் அணிவார்கள் அலங்கார ஆவரணங்கள் அணிவார்கள் தலையில் மலர்மாலைகள் கட்டுவார்கள் முழுப்பாவாடை சட்டைகள் அணிவார்கள் அற்புதம் .

1000 பேர்முதல் 2000 -3000 இறுதிநாளில் அதிகமக்கள் கூடுவார்கள்.

இங்கே தமிழின் அழகுடன் தமிழர்களின் பொருளாதாரம் எந்தெந்த விதத்தில் இந்தியாவிற்கு போகின்றது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

மாணவர்களைவிட அவர்களுடன் ஆண்டு தோறும் பாடுபட்ட அம்மாக்கள் வேறு தமது நாளாந்த உழைப்பின் அழகை அளவை விளைவைக்காணத் துடிப்பதை தாயின் அன்பை காணலாம்.

அத்தோடு இன்று பட்டி தொட்டியெல்லாம் பெருகிவிட்ட முக அலங்கரிப்பாளர்களின் கைவரிசைகளை இங்கே காணலாம்.

இந்தவாரம் அவர்களின் காலம் எத்தனை விதமான நிறத்துாள்கள் கரையப் போகின்றன.

சிலபேர் அதிகமாக அலங்கரித்து தமது இயற்கை அழகையும் கெடுத்துக் கொள்வதும் நிகழ்வதுண்டு.

இதற்கான பொருளாதாரச் செலவுகளும் இந்தியாவையே சென்றடை கின்றன.

தமிழ்ப்பண்பாட்டை பெண்கள் பேணும் அளவுக்க ஆண்கள் பேணுவ தில்லை. இப்படியான நிகழ்வுகளில் கூட ஆண்கள் வேட்டிகள் கட்டுவதில்லை.

இதனால் கலியாணநாளில் மாப்பிள்ளையாக வருபவருக்கூட வேட்டி கட்டத் தெரிவதில்லை. வேட்டிகட்டிவிடுங்கோ என்று கையை உயர்த்திக் கொண்டு திரிவார்.

பழைய காலத்தில் ஆண்களின் வீரத்தை அறிந்து பெண்கொடுப்பது போன்று வேட்டி கட்டத் தெரியுமா என்று அறிந்து பெண் கொடுக்க வெளிக்கிட்டால் தற்காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்த்த முடியாத அவலம்தான் நேரும் தமிழ் ஆண்களுக்கு வேட்டிகட்டத்தெரியாது.

ஆனால் தமிழப்பண்பாடு உடைய பாங்கான பெண்களைத் திருமணம் செய்யவே இங்கே பிறந்த பிள்ளைகளுக்கும் அதிக விருப்பம் இதுதான் இங்கு இருக்கும் மறைவு.

குமரிநாடு.நெற்-பூநகரி.பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து-09.03.தி.ஆ2044-29.03.கி.ஆ2013

ad

ad