புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2013

அவுஸ்திரேலிய அணி திணறல்: அஷ்வின், ஜடேஜா அசத்தல்
[
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வென்ற இந்திய அணி, 3-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
நான்காவது டெஸ்ட் டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தெரிவு செய்தது.
அவுஸ்திரேலிய அணி அணித்தலைவர் கிளார்க் முதன்முறையாக காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து வாட்சன் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றார். காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் காப்பாளர் மேத்யூ வேட் மீண்டும் அணிக்கு திரும்பினார். சகலதுறை வீரர் ஹென்ரிக்ஸ் நீக்கப்பட்டு மேக்ஸ்வெல் இடம் பிடித்தார்.
கணுக்கால் காயம் காரணமாக நாடு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் நீக்கப்பட்டு மிட்சல் ஜான்சன் வாய்ப்பு பெற்றார். மூன்றாவது டெஸ்டில் நீக்கப்பட்ட பட்டின்சனும் அணிக்கு திரும்பினார்.
இந்தியா அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதில் நீண்ட நாள் காத்துக்கொண்டிருந்த ரகானே அறிமுக வீரராக இடம் பிடித்தார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு கோவன், வார்னர் ஜோடி தொடக்கம் தந்தது. இஷாந்த் சர்மா வேகத்தில் வார்னர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹியுஸ் 45 ஓட்டங்கள் எடுத்து ஓரளவு கைகொடுத்தார்.
பின்னர் வந்த அணித்தலைவர் வாட்சன் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் கண்டம் தப்பினார். இவர் 17 ஓட்டங்கள் எடுத்த போது ஜடேஜாவிடம் சிக்கினார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் 38 ஓட்டங்களில் அஷ்வின் சுழலில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்மித் 46 ஓட்டங்களில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 231 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சிடில் 47 ஓட்டங்களும், பட்டின்சன் 11 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ad

ad