புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


 கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்: நாளை இறுதி சடங்கு
கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி தேவர் உடல்நலக்குறைவால் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று
பகல் 12.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.


ராமசாமி தேவர் உடல் வடுகபட்டியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறிந்து கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் வடுகபட்டி விரைகிறார்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் இறுதி சடங்கு நடக்கிறது.
மரணம் அடைந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து, பாண்டியன் என இருமகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

ad

ad