புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013



இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தி.மு.க.வை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது என்று மாநிலங்களவையில், தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில்,

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு இவ்விடயத்தில் அமைதி காக்கிறது. அரசு இதில் அக்கறை காட்டவேயில்லை. இது நல்லதல்ல'' என்றார்.
டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில்,
குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றிக் குறிப்பிடப்படவேயில்லை. தமிழர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைத் தமிழர் விடயத்தில், தி.மு.க.வை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது. நாம் ஏன் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது? அங்குள்ள தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இளங்கோவன் பேசும் போது காங்கிரஸ் எம்.பி.க்கள் குறுக்கிட்டனர். தமிழக காங்கிரஸ் எம்.பி. ஆரூண் பேசுகையில்,
ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்'' என்றார்.
இளங்கோவன் அதற்கு பதிலடியாக, முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறீர்களா? இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் 13ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று இலங்கை கூறிவிட்டது. ராஜீவ் காந்தியும், இலங்கையின் அப்போதைய அதிபர் ஜெயவர்தனேவும் 1987ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்ததுக்கு என்ன நேர்ந்தது'' என்றார்.
இதற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,
13ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தும் படி, இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வடக்கு மாகாணத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்தும்படியும் வலியுறுத்தி வருகிறோம். 2012ம் ஆண்டு ராஜபக்ச இந்தியா வந்திருந்த போது, இதைத்தான் அவரிடம் தெரிவித்தேன் என்றேன்.

ad

ad