புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013


இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே மத்திய அரசு கண்ணும், கருத்துமாக இருக்கிறது என்று விஜயகாந்த் கூறினார்.
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவின் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மனித உரிமை மீறல் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முதலாவதாக கொண்டு வந்த தீர்மானத்தில், சுதந்திரமான, நம்பத்தகுந்த சர்வதேச விசாரணையும், ஐ.நா.மன்ற அதிகாரிகள் இலங்கை அரசின் சம்மதம் இல்லாமலேயே சென்று விசாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வரும் 21-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள அமெரிக்காவின் இறுதி தீர்மானத்தில் இந்த இரண்டு அம்சங்களும் நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் இந்தியாவும், இலங்கையும் உள்ளன.
ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக்கூடாது என்பதை இந்தியா ஆரம்பம் முதல் பலமாக வற்புறுத்தி வருவதனால், இந்தியாவின் கருத்தை ஏற்று அமெரிக்கா இந்த திருத்தத்தை செய்துள்ளது. ஆகவே திருத்தம் செய்யப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் அதில் ஒன்றும் வியப்பில்லை, அதனால் பலனும் இல்லை.
சென்ற ஆண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது இந்தியா தலையிட்டு, இலங்கை அரசின் சம்மதத்தின் பேரில்தான் ஐ.நா. தலையிட வேண்டும் என்று திருத்தியது. தற்போதும் இந்தியா அதை கடைப்பிடிக்கிறது. சிங்கள இனவெறி அரசுக்கு எந்த வகையிலும் பாதகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதிலேயே இந்திய அரசு கண்ணும், கருத்துமாக இருக்கிறது. 
இதை நன்கு உணர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள், இத்தகைய வஞ்சகப் போக்கை எதிர்த்து நாடு முழுவதும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தே.மு.தி.க. முழு மனதோடு வரவேற்கிறது.
இப்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அரசிலோ, நாடாளுமன்றத்திலோ இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். சிங்கள இனவெறி அரசால் தமிழினப் படுகொலை நடப்பதற்கு முன்பே, கடந்த நாடாளுமன்ற தேர்தலை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அன்று அதை செய்திருந்தால் இந்த தமிழினப் பேரழிவு தடுக்கப்பட்டு இருக்கலாம். இனியாவது ஈழத்தமிழர்களின் லட்சியம் நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ad

ad