புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2013


கருணாநிதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!- பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்காவிட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரை சமாதானப்படுத்தும் வகையில், இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதேவேளை, விமான நிலையத்தில் அவர்களுக்கு மதிமுகவினர் கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் கறுப்பு கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர்களிடம் கருணாநிதி வேண்டுகோள்
மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தில் சில திருத்தம் கொண்டு வந்து அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
திருத்தம் கொண்டு வராவிட்டால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, இந்திய மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய 3 பேரும் இன்று மாலை சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து பேசினர்.
அப்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்தில, இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க உள்ளது குறித்து 3 மத்திய மந்திரிகளும் விளக்கி கூறினர்.
அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என பிரகனப்படுத்த வேண்டும் உள்பட சில திருத்தங்களை செய்துஇ தீர்மானத்தை வலுவாக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தினார்.
திருத்தம் கொண்டு வரவில்லை என்றால் தி.மு.க. கூட்டணியில் நீடிக்காது என மீண்டும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம் மீது இதுவரை மத்திய அரசு தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவிக்காத நிலையில், இன்று கருணாநிதியுடன் மத்திய மந்திரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
3ம் இணைப்பு
இந்த சந்திப்புக்குப் பின்னர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம்.
கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்.

ad

ad