புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013


இன்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் இலயோல கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும் , இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ,
சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் ,
உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருகிறார்கள் . இதில் 10 மாணவர்கள் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்கள் போராட்டம் செய்யும் பகுதி இலங்கை தூதரகம் அருகில் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் . மாணவர் போராட்டம் வெல்லட்டும் .

ad

ad