புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும். 

ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மாணவிகள் வெயிலில் அமர்ந்திருந்தால் சருமம் கறுத்துவிடும் என்பது குறித்த கவலையற்றவர்களாக இருந்தார்கள். 

மாணவர்கள் போராட்டத்தில் வந்து முகம் காட்டலாம் என்று வந்த எல்லா அரசியல்கட்சிகளையும் தள்ளி நிற்க வைத்தார்கள். 

கடுமையான வெயிலில் மாணவர்கள் அமர்ந்து போராடுவதைப் பார்த்த  காவல்துறை அதிகாரி ஒருவர் மாணவர்கள் சிலரை அழைத்து, ``வெயில் மணலில் அமர வேண்டாம்.. பக்கத்தில் புல்தரையில் அமருங்கள்..” என்று கூறினார். அதை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்ததன் மூலம் எனக்கு ஒன்று உறுதியானது.. `ஜெயா மாணவர்கள் போராட்டத்தை கருணாவைப்போல் சீர்குலைக்க விரும்பவில்லை..’ என்று. ( இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருக்கிறது. மாணவர் போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டு அருவடை செய்வதே ஜெயாவின் நோக்கமாக இருக்க முடியும். மற்றபடி ஈழத்தாய் பட்டம் கொடுத்தவர்கள் போல் அவருக்கு தமிழீழம் அமைத்துக்கொடுத்து அவதாரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இருக்க முடியாது..)

ஆனால் மாணவர்கள்  அந்த காவல்துறை அதிகாரியின் கோரிக்கையை ஏற்காமல்  தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் சுடுமணலிலேயே அமர்ந்து போரட்டத்தை நடத்தினார்கள்.

நேரம் ஆக ஆக பெண் பிள்ளைகள் குழுவாக வந்து கொண்டே இருந்தார்கள். எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அதைப் பார்க்க ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டும் மாணவர்கள் இப்படி கொளுத்தும் வெயிலில் வந்து போராட வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. 

ஆனாலும் அவர்களை அப்படி வரவைத்தது பாலசந்திரனின் பால்மணம் மாறாத அந்த ஒற்றைப்பார்வையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். 

உங்களைப் பார்க்க சிலீர்ப்பாக இருக்கிறது மாணவர்களே.. 2009 காலகட்டத்தில் உங்களையெல்லாம் நாங்கள் தவற விட்டுவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இப்போது உங்களை களத்தில் பார்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.. வெல்வோம் நாம்.. :)
இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும்.

ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மாணவிகள் வெயிலில் அமர்ந்திருந்தால் சருமம் கறுத்துவிடும் என்பது குறித்த கவலையற்றவர்களாக இருந்தார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் வந்து முகம் காட்டலாம் என்று வந்த எல்லா அரசியல்கட்சிகளையும் தள்ளி நிற்க வைத்தார்கள்.

கடுமையான வெயிலில் மாணவர்கள் அமர்ந்து போராடுவதைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் மாணவர்கள் சிலரை அழைத்து, ``வெயில் மணலில் அமர வேண்டாம்.. பக்கத்தில் புல்தரையில் அமருங்கள்..” என்று கூறினார். அதை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்ததன் மூலம் எனக்கு ஒன்று உறுதியானது.. `ஜெயா மாணவர்கள் போராட்டத்தை கருணாவைப்போல் சீர்குலைக்க விரும்பவில்லை..’ என்று. ( இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருக்கிறது. மாணவர் போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டு அருவடை செய்வதே ஜெயாவின் நோக்கமாக இருக்க முடியும். மற்றபடி ஈழத்தாய் பட்டம் கொடுத்தவர்கள் போல் அவருக்கு தமிழீழம் அமைத்துக்கொடுத்து அவதாரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இருக்க முடியாது..)

ஆனால் மாணவர்கள் அந்த காவல்துறை அதிகாரியின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் சுடுமணலிலேயே அமர்ந்து போரட்டத்தை நடத்தினார்கள்.

நேரம் ஆக ஆக பெண் பிள்ளைகள் குழுவாக வந்து கொண்டே இருந்தார்கள். எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அதைப் பார்க்க ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டும் மாணவர்கள் இப்படி கொளுத்தும் வெயிலில் வந்து போராட வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை.

ஆனாலும் அவர்களை அப்படி வரவைத்தது பாலசந்திரனின் பால்மணம் மாறாத அந்த ஒற்றைப்பார்வையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

உங்களைப் பார்க்க சிலீர்ப்பாக இருக்கிறது மாணவர்களே.. 2009 காலகட்டத்தில் உங்களையெல்லாம் நாங்கள் தவற விட்டுவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இப்போது உங்களை களத்தில் பார்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.. வெல்வோம் நாம்.

ad

ad