புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டார்!- இன்னர் சிட்டி பிரஸ்
ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளால் தயாரித்து வழங்கப்பட்ட இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னர் சிட்டி பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் திகதி ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹன்ன மற்றும் ஜப்பானின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் ஜப்பான் உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகள் தயாரித்த அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்ததாக கூறப்படும் செயற்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இன்னர் சிட்டி பிரஸின் கேள்விக்கு பதில் வழங்கிய பான் கீ மூன், ஜப்பானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களின் படி, இலங்கை அரசாங்கம் மீளமைப்பு மற்றும் புனர்வாழ்வு தொடர்பில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகளை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் அது தொடர்பில் எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது என்று இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு அவரின் பேச்சாளர் பதில் வழங்கவில்லை.
இதற்கிடையில் இன்று பான் கீ மூனின் பொறுப்பின்மை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது ஹெயிட்டியில் கொலரா நோய் பரவல் தொடர்பில் பான் கீ மூன் செயற்பட்ட விதம், இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் தோல்வியடைந்தமை போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த கூட்டம் மிகவும் இரகசியமான முறையில் நடைபெறும் என்பதால், இதன் தகவல்கள் வெளிப்படுத்தப்படமாட்டாது. என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

ad

ad