புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2013


வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை இருக்கின்றது.
உங்களுக் வேறு நாடு இல்லை, உங்களது தாய் நாடு இதுவாகும். இந்த நாட்டை எழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம்.
உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க( boarding) திட்டமிடவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள்.
இந்த காணிகளை மீளவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போரின் போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad