புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2013


நாடு திரும்பிய துமிந்த சில்வா தனியார் வைத்தியசாலையில் அனுமதி! கைது செய்ததாக பொலிஸார் அறிவிப்பு
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.26 அளவில் துமிந்த சில்வா, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்திருந்தார்.
இந்த மோதல் சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த கொலைச் சம்பவத்துடன் துமிந்த சில்வாவிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து பாரதவின் குடும்பத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
துமிந்த சில்வாவை பிரதிவாதியாகப் பெயரிட்டு விசாரணை நடாத்துமாறு அண்மையில் சட்ட மா அதிபர் திணைக்களம், புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த சில்வா தனியார் வைத்தியசாலையில் அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துமிந்த சில்வா இன்று காலை நாடு திரும்பியிருந்தார்.
கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் துமிந்த சில்வா மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸார் அறிவிப்பு
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 10.00 மணியளவில் துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
துமிந்த சில்வாவை கைது செய்து வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 1.30 அளவில் துமிந்த சில்வா நாடு திரும்பியிருந்தார்.

ad

ad