புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2013


கனிமொழி பொதுக்கூட்டம் திடீர் ரத்து
திண்டிவனத்தில் நேற்று மாலை தி.மு.க. கலை இலக்கிய பேரவை சார்பில் பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் வரவில்லை.

கனிமொழி ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் மாவட்ட செயலாளர் பொன்முடி எதிர்ப்பால்தான் கனிமொழி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் பரவியுள்ளது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் வக்கீல் பாபு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மாவட்ட செயலாளர் பொன்முடியிடம் இதற்கான அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக பொன்முடி, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச் செயலாளர் அன்பழகனிடம் புகார் செய்ததாகவும், இதைத்தொடர்ந்து தான் கனிமொழி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தி.மு.க.வில் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். 
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான முன்னாள் மாவட்ட அமைப்பாளர் முத்து கூறும்போது, நாங்கள் பொன்முடியிடம் தகவல் தெரிவித்து விட்டுதான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம் என்று கூறினார்.
இது தொடர்பாக பொன்முடியிடம் கேட்டபோது இந்த பிரச்சினை சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். கனிமொழி வராதபோதிலும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ad

ad