புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013



இந்தியாவைப் பகைத்து இலங்கையால் எதுவும் செய்ய முடியாது : ஐ. தே. க.


இலங்கைக்கு எதிரான சர்வதேச தீர்மானங்களை எதிர்கொள்ள அரசாங்கம் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரேப்பிய நாடுகளுடன் இலங்கை நட்புறவைப் பேணி 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையேல் சூடானைப் போன்று மோசமான நிலைக்கு எமது நாடு தள்ளப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அண்டை நாடான இந்தியாவுடன் சிறந்த நட்புறவைப் பேணி இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதே நல்ல முடிவாகும். அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தான் தயாரித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றைக்கூட நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.
இந்நிலையில், உலகத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளைக்கூறி தனக்கு வேண்டியபடி தான் நினைத்ததை செய்கின்றது. தற்போது அரசு ஆணைக் குழுவின் பரிந்துரையில் உள்ள கடினமாகவுள்ள வாக்குறுதிகளை அதில் இருந்து அகற்றுமாறு கோருகின்றது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவிற்கு இலங்கை சார்பாக 25 அமைச்சர்களும் 60 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் சென்றனர். ஆனால் இம்முறை ஜெனீவா மனித உரிமை மாநாட்டிற்கு செல்வதற்கு எந்த அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ முன்வரவில்லை.
ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதி அங்கு மனித உரிமைகள் ஆணையாளருடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடலை புறக்கணித்துவிட்டு தாய்நாடு திரும்பியுள்ளார். இச் செயலானது எமது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சனல்-4 வினால் வெளியிடப்பட்ட முதலாவது ஆவணப்படத்திற்கு அது பொய்யானவை அதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்வோம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள் ஆனால் அவற்றை அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை. தற்போது வெளியிட்ட ஆவணப்படத்திற்கும் அவ்வாறே சொல்கின்றது அரசாங்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad