புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013


வெளிநாடு செல்லும் பணிப்பெண்களே! இப்படியும் ஒரு நரக வாழ்க்கை உங்களுக்குத் தேவைதானா?


பொருளாதார பிரச்சினைகள் மற்றும் குடும்ப கஸ்ட்டத்தினால் இன்று நாட்டில் பல பகுதிகளிலும் இருந்து பெண்கள் வெளிநாடுக
ளுக்கு பணிபெண்களாக செல்கின்றனர். 

இவர்கள் செல்லும் போது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நாடு திரும்ப முடியும் என்ற நிபந்தனையோடு வெளிநாடுகளுக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

குடும்ப கஸ்ட்டத்தினால் பொருளாதாரத்தை தேடி செல்லும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை எதிர் பார்த்துகொண்டிருக்கும் பொற்றோர்கள், பிள்ளைகள் சிலருக்கு இறுதியில் கிடைப்பது ஏமாற்றம் மாத்திரமே. 

இன்று நாட்டில் அதிகரித்து வரும் வெளிநாட்டு மோகத்தால் பணிபெண்களாக செல்லும் பெண்கள் சிலர் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கவீனர்களாக, சடலங்களாகவே அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு, சித்திரவதைகளுக்கு துன்பங்களுக்கு முகங்கொடுத்து நாடு திரும்பிய ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜா கிருஸ்ணவாணியை எமது செய்தியாளர் அண்மையில் நேரில் சந்தித்தார். 

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டத்தைச் சேர்ந்தவர்தான் செல்வராஜா கிருஸ்ணவாணி. இவருக்கு வயது 28. இவரது குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை. கிருஸ்ணவாணி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. 

கிருஸ்ணவாணியின் தந்தை ஓய்வூதியம் பெற்றவர். தாயி தோட்டத் தொழிலாளி (சேவையாளர்). தாயின் உழைப்பில்தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

வீட்டுக் கஸ்டத்தை போக்க வேறு வழியின்றி கிருஸ்ணவாணி, 2008.05.13 அன்று சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று 2010.10.08 அன்று மீண்டும் நல்லபடியாக வீடு திரும்பி கிருஸ்ணவாணி மீண்டும் 2010ம் வருடம் சவுதி அரேபியாவிற்கு சென்று 2012.07.05 நாடு திரும்பினார். 

அதே வருடத்தில் கிருஸ்ணவாணி தனது வெளிநாட்டு பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். அதன் பின்னர் இவர் சவுதியில் இருந்து ஜோர்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

தன்னை ஜோர்தானுக்கு அழைத்துச் செல்வதை தெரிந்துகொண்ட கிருஸ்ணவாணி, ´நான் வந்தது சவுதிக்கு என்னை ஏன் ஜோர்தான் நாட்டுக்கு அழைத்து செல்கிறீர்கள்? என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டுள்ளார். 

´உன்னை நாங்கள் ஜோர்தானுக்கு கூட்டிச் சென்று மீண்டும் சவுதிக்கு அழைத்து வந்துவிடுவோம்´ என வீட்டு உரிமையாளர் கூறி அழைத்துச் சென்றதாக கிருஸ்ணவாணி குறிப்பிட்டார். 

சவுதியில் இருந்து ஜோர்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கிருஸ்ணவாணி ஒருவார காலம் அங்கு கொடுமை, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

ஒருநாள் இரவு நேரத்தில் வெளியில் செல்லுமாறு ஜோர்தான் வீட்டு உரிமையாளரால் கிருஸ்ணவாணிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது செய்வதறியாது வீட்டுக்கு வெளியில் சென்று தங்கியதாக அவர் தெரிவித்தார். 

அப்போது கிருஸ்ணவாணியின் உடம்பு பகுதியில் கொதித்த எண்ணையை ஊற்றியுள்ளனர். அதனால் அவரின் உடம்பில் ஒரு சில பகுதிகளில் எரிகாயங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. கேட்பதற்கு நாதியில்லை. வருத்தத்தையும் பொருட்படுத்தாது கிருஸ்ணவாணி வேலையை தொடர்ந்துள்ளார்.

வேதனையில் ஒருநாள் கிருஸ்ணவாணி தன்னை அறியாமல் வேலை நேரத்தில் உறங்கிவிட்டார். இதனை கண்ட வீட்டு உரிமையாளர் அவரின் தலைமுடியை வெட்டி கொடுமைபடுத்தியுள்ளனர். 

பின்னர் கிருஸ்ணவாணி சவுதிக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வீட்டு உரிமையாளரின் ஆடைகளை கழுவி மூன்றாவது மாடியில் காய வைக்கச் சென்றபோது யாரோ அவரை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். கீழே விழுந்த கிருஸ்ணவாணிக்கு இடுப்புப் பகுதியும் வலது காலும் உபாதைக்கு உள்ளானது. 

அதன் பின்னர் அருகில் உள்ள வீட்டில் பணிபுரிந்த இந்தியரால் கிருஸ்ணவாணி சவுதி அரேபிய வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்னால் போட்டு சென்றுவிட்டார். தெய்வாதீனமாக அவருக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 

அதன் பின் பணியக அலுவலர்கள் கிருஸ்ணவாணியை சவுதி வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளனர். ஒரு மாதகாலம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற அவர் சிகிச்சையின் பின் இரண்டு மாத காலம் சவுதி வெளிநாட்டு பணியகத்தில் தங்கியிருந்துள்ளார். 

கிருஸ்ணவாணிக்கு நடந்த துயரத்தை அறிந்த பெற்றோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்ததன் பயனாக 2013.01.04ம் திகதி கிருஸ்ணவாணி நாடு திரும்பினார். 

நாடு திரும்பி கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறச் சென்ற கிருஸ்ணவாணியை அனுமதிக்க அங்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் நாவலபிட்டி வைத்தியசாலைப்புச் சென்றார். 

நாவலபிட்டி வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு மாதத்திற்கு சுமார் 4000 ரூபா தேவை என வைத்தியர்கள் கூறியதாகவும் அதனை செலுத்த முடியாது தவித்ததாகவும் கிருஸ்ணவாணி தெரிவிக்கின்றார். 

வெளிநாடு செல்லும் பணிப்பெண்கள் இவ்வாறு வெளிநாட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு நாடு திரும்பி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது தேவைதானா? அதற்கு உள்நாட்டில் வேலை செய்தால் வேதனை, சித்திரவதை அற்ற ஓரளவு கௌரவமான வாழ்க்கையை உயிர்பாதுகாப்புச் சூழலில் வாழ்லாமே..! 

ad

ad