புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2013


பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? – சரத் பொன்சேகா புதிய தகவல்

ஆனால், பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் என்னவாயினர் என்று தமக்குத் தெரியாது அவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் கூறிவந்தன.
இந்தநிலையில், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையில் காணப்படும் ஒளிப்படம் வெளியானது.
இதையடுத்து பாலச்சந்திரன் காவலரண் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒளிப்படங்களை சனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், பிரபாகரனின் மனைவி, மதிவதனி, மகள் துவாரகா ஆகியோரும் போரின் முடிவில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கடந்த புதன்கிழமை கூறியுள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதுபற்றிய தகவலை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
சந்தியா ஜெய்ன் என்ற இந்திய செய்தியாளர் தனது கட்டுரை ஒன்றில் சரத் பொன்சேகா வெளியிட்ட இந்தத் தகவல் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தச் சந்திப்பில் சரத் பொன்சேகா, பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை தனது படையினர் கொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்திருந்தார்.
அதேவேளை, பிரபாகரனின் மனைவி மதிவதனி, 20 வயதான அவரது மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்கள் போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009 மே 20ம் நாள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் நினைவு கூர்ந்தார்.
பிரபாகரனின் உடல் சிறிலங்கா இராணுவத்தினரால் மீட்கப்பட்டு ஒரு நாள் கழித்து தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நந்திக்கடல் பகுதியில் இந்த உடல்கள், கண்டுபிடிக்கப்பட்டன.
நீரேரிப் பகுதியில் 150 ஏனைய விடுதலைப் புலிப் போராளிகளின் உடல்களும் கூட மீட்கப்பட்டன.
பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி (24 வயது) கரையமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் 2009 மே 18ம் நாள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவருடன் ஏனைய மூத்த தலைவர்களான புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், புலித்தேவன், மூத்த களமுனைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியோரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
முதல் நாள் போர் தவிர்ப்பு வலயத்தில் கேட்ட பாரிய தொடர் குண்டுவெடிப்புகளின் போது, பெரும்பாலும் அவர்கள் தமது உயிர்களை மாய்த்திருக்கலாம் என்று அப்போதைய தகவல்கள் தெரிவித்தன என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு

ad

ad