புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013


மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்! தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற, ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க் குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மேலும், மாணவமாணவியர் 210 இடங்களில் ஆர்ப்பாட்டம், 110 இடங்களில் ஊர்வலம், 68 இடங்களில் சாலை மறியல், 31 இடங்களில் ரயில் மறியல், 24 இடங்களில் உருவபொம்மையை எரித்தல் ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்பதை மனதில் வைத்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

ad

ad