புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013

சென்னையில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 1.26 காசுகள் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணய
ம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மிகவும் குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து பெட்ரோலுக்கான புதிய விலை குறைப்பு பட்டியலை எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இந்த குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

அதன்படி சென்னையில் ரூ. 70.34 காசாக விற்கப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையானது 1.26 காசுகள் குறைந்து ரூ. 69.08 காசுகளுக்கு விற்கப்படும். 

மேலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் முறையே ரூ.1.20, 1.24, 1.26 காசுகள் குறைக்கப்படவுள்ளது.

ad

ad