புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2013

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி வெற்றி: 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 38 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் அதிரடியாக விளையாடிய ஹஸ்சி அரைசதம் கடந்து 95 ஓட்டங்களும், ரய்னா 44 ஓட்டங்களும், டோனி 18 ஓட்டங்களும், சகா 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதில் பிஸ்லா அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும், மார்கன் 32 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணி சார்பில் ஆட்ட நாயகன் விருதை ஹஸ்சி பெற்றுள்ளார்.

ad

ad