புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2013


கோட்டபாயவின் கொலையை அம்பலப்படுத்திய சிங்களத் தாய் அச்சத்தில் மகிந்த கம்பணி

கோட்டபாயவின் கொலையை அம்பலப்படுத்திய சிங்களத் தாய் அச்சத்தில் மகிந்த கம்பணி
பானா என்னும் சித்திரவதை முகாமில் 1989ம் ஆண்டு கோட்டபாய புரிந்த கொடூரங்கள் மெல்ல மெல்ல சிங்களவர்கள் வாயிலாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இம் முறை தமிழர்கள் எவரும் குற்றஞ்சாட்டவில்லை ! மாறாக சிங்களத் தாய் ஒருவர் தனது வாக்குமூலத்தை கண்ணீர் மல்க பதிவுசெய்துள்ளார். இச் செய்தியானது பல சிங்கள ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் மாத்தளை என்னும் இடத்தில் வைத்தியசாலை கட்ட அத்திவாரம் தோண்டும்வேளை அங்கே புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே சுமார் 150 பேருடைய மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. அவை 1980 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று, சொல்லப்படுகிறது. இக் காலகட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ அப்பகுதியில் லெப்டினன் கேணலாக பதவிவகித்துள்ளார் என்பது, ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது !
இந்தச் சிங்களத் தாய் கூறும் வாக்குமூலம் :
கணவனை இழந்த கமலாவதி என்னும் இத் தாய், புல்மோடயில் தனது 2 மகனுடன் வசித்து வந்துள்ளார். அக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் புல்மோடையில் உள்ள சிங்களவர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறியிருந்தார்கள். இதனால் இத் தாயார் தனது வீட்டைக் காலிசெய்து அந்த ஊரில் இருந்து வெளியேறி மாத்தளைக்கு வந்து குடியேறியுள்ளார். 1989ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி, மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலய என்னும் பள்ளிக்கூடத்துக்கு அருகாமையில் இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது கமலாவதி தனது இரண்டு மகனுக்கும் மதிய உணவைக் கொடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். வீட்டினுள் நுளைந்த இராணுவத்தினர், இச் சிங்கள இளைஞர்களை இருவரையும் பலவந்தமாக இழுத்துக்கொண்டு சென்றுள்ளார்கள். சுசந்த (18) மற்றும் நிஷந்த(17) ஆகிய இவ்விரு சிங்கள இளைஞர்களையும் இலங்கை இராணுவம் அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் முகாமுக்கு கொண்டுசென்றுள்ளார்கள். இராணுவத்தின் வாகனத்துக்கு பின்னால் கமலாவதி ஓடிச் சென்றுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட முகாமிற்குள் செவதனையும் அவர் நேரில் பார்த்துள்ளார்.
மீண்டும் மறுநாள் அவர் சென்று தனது மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று காவலாளிகளிடம் மன்றாடியிருக்கிறார். ஆனால் அவர் முகாமுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதியான எக்கநாயக்கவை தொடர்புகொண்டுள்ளார்.(எக்கநாயக்க தற்போது ஆழும் கட்சி அமைச்சராக இருக்கிறார்) அவர் தனது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்துவிட்டு, தான் லெப்டினன் கேணல் கோட்டபாயவுடன் பேசிவிட்டதாகவும் இனிச் சென்று நீங்கள் உங்கள் மகனை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி கமலாவதியும் அம் முகாமுக்கு மீண்டும் சென்றுள்ளார். ஆனால் அவரைப் பார்க்க கோட்டபாய மறுத்துவிட்டார். இதனிடையே இலங்கை இராணுவமானது பெயர் பட்டியல் ஒன்றைக் காட்டி, உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி, இத் தாயாரை அங்கும் இங்குமாக அலையவைத்துள்ளார்கள். அப்படியே காலங்கள் ஓடிவிட்டது. வீட்டிற்க்கும் இராணுவ முகாமுக்குமாக அலைந்த அத்தாயார், இறுதியில் மனமுடைந்து முடங்கிப்போனார்.
1989ம் ஆண்டு காணமல் போன அந்த 2 சிங்கள மாணவர்களும் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்கள் மாத்தளையில் வைத்தே காணமல் போனார்கள். அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்தார்கள். அவர்களை கமலாவதி விசாரித்தவேளை, தம்மை ரெஸ்ட் ஹவுஸ் முகாமில் வைத்திருந்தவேளை, உங்கள் மகன்மார் இருவரையும் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டுசென்றார்கள். ஆனால் அவர்கள் இருவரும், தாம் தங்கியிருந்த முகாமுக்கு திரும்பி வரவில்லை என்று விடுதலையான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு பின்னர் அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இலங்கை இராணுவம் பிடித்துச் சென்ற இந்த 2 சிங்கள மாணவர்களின் உடல்களும் இந்த 150 எலும்புக்கூடுகளுக்குள் ஒன்றாக இருக்குமா என்ற ஏக்கம் தற்போது கமலாவதிக்கு வந்துள்ளது. டி.என்.ஏ பரிசோதனை நடந்தால் மாத்திரமே அவர்கள் இறந்துவிட்டதை உறுதிசெய்ய முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. இலங்கையில் லட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஏக்கத்தோடு வாழும் நிலையில், உள்ளனர். இதுபோல சில சிங்களவர்களும் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம் கலந்த உண்மை நிலை ஆகும்.
1989ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய கோட்டபாய ராஜபக்ஷ பின்னர் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கே கிரீன் காட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்தர் தீவிர அரசியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். 1989ம் ஆண்டு தான் இராணுவத்தில் இருந்தவேளை எதை அவர் செய்தாரோ அதனையே அவர் 2009ல் அரங்கேற்றியுள்ளார் !
asrilanka-gota-1asrilanka-gota-2asrilanka-gota-3asrilanka-gota-4

ad

ad