புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013




           ன்றா, இரண்டா 1993 முதல் இன்றுவரை இருபது ஆண்டுகள் என்.கே.கே. பெரியசாமி அதன்பிறகு அவர் மகன் என்.கே. கே.பி.ராஜா இவர்கள்தானே கட்சியின் மாவட்டச் செயலாளர்கள். ஈரோட்டில் இவர்கள் கட்சியை ஒரு கம்பெனி போலத்தானே இப்போதும் நடத்தி வருகிறார்கள். கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இவர்கள்தான் அமைச்சர்களாக இருந்தார்கள். ஒரே ஒரு கட்சி தொண்டன் கூட இவர்களால் அரசு வேலைக்கு போனதுண்டா? தகுதியும், வாய்ப்பும் இருந்த கட்சிக்காரர்களுக் கும் இந்த வேலைக்கு இவ்வளவு ரேட் என்றுதானே இவர்கள் வெளிப்படையாக கேட்டார்கள்.

எம்.எல்.ஏ. சீட் பரிந்துரைக்க லட்ச லட்சமாக வாங்கினார்கள். ஏன் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கூட வார்டு கவுன்சிலர் சீட் முதல் மாநகர மேயர் சீட் வரை பட்டியல் போட்டு வசூலித்தவர்கள்தான் இவர்கள். இப்படி இவர்களது ஆதிக்கத்திலிருந்து எப்போது எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்? என எதிர்பார்த்து காத்திருந்த நேரத் தில்தான் கட்சி தலைமை எங்கள் வயிற்றில் பால் வார்த்தது போல உட்கட்சி தேர்தலை அறிவித்துள்ளது. விடுவோமா நாங்கள் இதுதானே எங்களுக்கு கிடைத்த விடுதலை வாய்ப்பு'' -இப்படித்தான் ஈரோடு தி.மு.க. மா.செ. என்.கே.கே.பி. ராஜாவுக்கு எதிராக எதிர்கோஷ்டியில் உள்ள உடன்பிறப்புகள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.


""கட்சியில் செல்வாக்கு இல்லாத செல்லாக்காசு கள் ஒன்று சேர்ந்து எங்களை என்ன செய்ய முடியும்? மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாண வர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் என இப்போ துள்ள நிலையில் பெரும்பான்மை பலம் எங்களுக் குத்தான் உள்ளது. ராஜா மீது என்ன விமர்சனங்கள் கூறப்பட்டாலும் மாவட்ட கட்சியின் கண்ட்ரோல் பவர் ராஜாவிடம்தானே உள்ளது. தளபதி நம்பக்கூடிய ஐந்தாறு மா.செ.க்களில் ராஜாவும் ஒருவர்'' இப்படி ராஜாவின் ஆதரவு அணி கலக்கம் இல்லாமல் பதில் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த அரசியல் சூழலில் கோபி நகர, ஒன்றிய தி.மு.க.வின ரோடு முத்துச்சாமி  வெளிப்படையாக கலந்துரையாடல் செய்கிறார் என ராஜா எதிர்ப்பு அணி உ.பி.க்களுக்கு தகவல் கொடுக்க 7-ந் தேதி இரவு 7 மணிக்கு கோபியிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் முத்துச்சாமியின் உறவினர் தோட்டத்தில் கூட்டம் தொடங்கியது. ராஜாவுக்கு எதிரான அணி நடத்தும் ரகசிய கூட்டம் என்பதால் நடப்பதை கவனிக்க நாமும் ஆஜரானோம். முன்னாள் எம்.பி.க்கள் வி.பி.சண்முக சுந்தரம், கந்தசாமி, சின்னசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓ.சுப்பிரமணியம், அந்தியூர் குருசாமி, மாதையன், மாணிக்கம் என முக்கிய நிர்வாகிகளோடு ஒன்றிய, நகர, முன்னணி நிர்வாகிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உ.பி.க்கள் ஒரு மாநாடு போல குவிந்திருந்தனர்.

கூட்டத்தின் மத்தியில் மைக் பிடித்து பேசத் தொடங்கினார் முத்துச்சாமி ""இனி நான் மீண்டும் ஈரோட்டிலேயே நிரந்தரமாக வசிக்கப் போகிறேன். அதற்குக் காரணம் மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி.ராஜாதான், சென்ற 22-ந் தேதி மாவட்ட செயற்குழுவில் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வமாக ஈடுபட்ட நமது தோழர்கள் பி.கே.பழனிச்சாமி, ஈரோடு இறைவன், அக்னி சந்துரு ஆகிய மூவரையும் உதைக்க வேண்டும் என்று ராஜா பேசினார். அது மட்டுமல்லாமல் என்னைப் பார்த்து என்னை எதிர்த்து நீங்கள் மாவட்டச் செயலாளருக்கு போட்டியிடுங்கள். முத்துச்சாமியா? ராஜாவா பார்த்துவிடுவோம்.... என்றார். ராஜாவுக்கு ஆதரவாகப் பேசிய மொடக்குறிச்சியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் என்னைப் பார்த்து, "நீங்கள் கட்சியை விட்டு வெளியே போங்கள்' என்றார். நான் இதற்குமேல் எப்படிப் பொறுப்பது? தலைவர் கலைஞர் ஈரோட்டில் என்ன நடக்கிறது என்றெல்லாம் மூன்று முறை கேட்டார். நான் எதுவும் பேசவில்லை. தளபதி ஏன் என்னிடம் எதுவும் நீங்கள் கூறவில்லை என்றுகூட கேட்டார். நானாக ராஜாவுக்கு எதிர்ப்பு அரசியல் செய்யவேயில்லை. வருகிற உட்கட்சி தேர்தலில் நான் மாவட்டச் செயலாளருக்கு போட்டியிடப் போகிறேன். அதில் மாற்றமே இல்லை. 30 வயதில் என்னை எம்.ஜி.ஆர். அமைச்சராக்கினார். அதன்பிறகு என்னை மாவட்டச் செயலாளராக இருக்கச் சொன்னார். அமைச்சர் பதவியும், மாவட்டச் செயலாளர் பதவியும் எனக்கே வேண்டாம் என்று செங்கோட்டையனை மாவட்டச் செயலாளராக்கினோம். ஆனால் இப்போது எனக்கு வயது 64. இந்த வயதில் என்னை மாவட்டச் செயலாளராக ஆக்கப்போவது என்.கே.கே.பி.ராஜாதான். அடுத்த முறை நிச்சயமாக கழகம் ஆட்சிக்கு வரும். அப்போது தி.மு.க. தொண்டர்கள் முழு பலன் பெறும் வகையில் நான் உழைப்பேன்'' என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையே.

முத்துச்சாமியின் அரசியல் நடவடிக்கை பற்றி ராஜாவின் கருத்து என்ன? ராஜாவிடம் கேட்டோம். ""சு.முத்துச்சாமி அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தபோது எத்தனையாயிரம் பேரோடு வந்தார். இப்போது அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்? நான் கட்சிக்காரர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முத்துச்சாமி சொல்வதற்கு அவருக்குத் தகுதி இல்லை. நான் கட்சிக்காரர்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளேன் என்று கட்சிக்காரர்களுக்குத் தெரியும். முத்துச்சாமிக்கு அவரது ஆதரவாளர்களால்தான் அவருக்குப் பிரச்சினை. நான்தான் முத்துச்சாமியை மாவட்டச் செயலாளராக நிற்கச் சொன்னேன். அவரிடம் சவால் விட்டேன் என்பது தவறு. முத்துச்சாமி இதே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுகிறார்.  என்னிடம் 95 சதவீத கட்சியினர், நிர்வாகிகள் உள்ளார்கள். கட்சித்  தேர்தல் வரட்டும். முத்துச்சாமி போட்டி போடட்டும். நானா, அவரா என்று அப்போது பார்ப்போம்'' என உறுதியாகப் பேசினார் ராஜா.

""ராஜாவால் பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் என்னிடம் வந்து நீங்கள் மாவட்டச் செயலாளருக்குப் போட்டி போடவேண்டும் என கேட்டபோது கூட நான் மறுத்துவிட்டேன். ஆனால் ராஜாவே 22-ந் தேதி செயற்குழுவில் நேருக்கு நேராக என்னைப் பார்த்து போட்டி போடுங்கள், போட்டியிட வேண்டும் என்று பேசினார். அப்போது கூட எனக்கு அந்த மனநிலை இல்லை. திரும்பவும் ராஜாவின் அணுகுமுறை, செயல்பாடுகள் சரியான நிலைப் பாட்டில் இல்லை. தீர ஆலோசித்து இப்போதுதான் முடிவெடுத்துள்ளேன்... உட்கட்சித் தேர்தலில் நான் போட்டி போடத்தான் போகிறேன். கட்சியில் அடிமட்டத் தொண்டனுக்கும் உண்மையான பலன் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்'' என்றார் முத்துச்சாமி நம்மிடம்.

தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் அனலைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டது. 

ad

ad