புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2013


கணவனிடமிருந்து நட்டஈடு கோரி இலங்கை பெண் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு
சென்னையில் வாழும் தனது கணவனிடமிருந்து 20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி இலங்கை பெண் ஒருவர் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் பெண்ணின் கணவனான காஜா மொகைதீன் என்பவரை நீதிமன்றுக்கு அழைத்து இந்த வழக்கை இணக்கசபைக்கு அனுப்பியுள்ளார்கள்.
கறித்த பெண் 2002ம் ஆண்டில் சவூதி அரேபியாவில் மருத்துவ மாதுவாக  பணி செய்து கொண்டிருந்தபோது சாரதியாக பணியாற்றிய காஜா மொகைதீனை காதலித்துள்ளார்.
இருவருக்கும் அம்பாறையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுடைய மகளுக்கு மூன்றரை வயதாக இருந்தபோது காஜா மொகைதீன் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு போய்விட்டார்.
இந்நிலையில் காஜா மொகைதீனை தேடி றிஸ்மியா சென்னைக்கு சென்றுள்ளார். அவரை தேடிப் பிடிப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
அங்கு சென்றபோதுதான் காஜா மொகைதீன் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்பதனையும் றிஸ்மியா அறிந்து கொண்டார்.
இந்நிலையில் தன்னுடன் வாழ்க்கை நடத்துமாறு றிஸ்மியா கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் தனிக்குடித்தனம் நடத்துவதாயின் பணம் தேவையென்று கூறி காஜா மொகைதீன் றிஸ்மியாவை வற்புறுத்தி சவூதிக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.
சவூதியிலிருந்து 2008 ஆம் ஆண்டு சென்னைக்கு திரும்பிய றிஸ்மியா, காஜா மொகைதீனை மீண்டும் தன்னுடன் வருமாறு அழைத்து நெருக்கடி கொடுத்துள்ளார்.
நெருக்கடி தாங்க முடியாத காஜா மொகைதீன் வைத்தியசாலைக்கு சென்று வருவோம் எனக்கூறி றிஸ்மியாவை ஏமாற்றி அழைத்துச் சென்று ஊரப்பாக்கத்திலுள்ள மனநோயாளி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அந்த வைத்தியசாலையில் றிஸ்மியா 20 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வைத்தியசாலையில் வைத்து கடுமையான மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன் தரக்குறைவான உணவும் வழங்கப்பட்டுள்ளது.
20 மாதங்களுக்கு பின்னர் வைத்தியசாலை நிர்வாகம் ஆவணமொன்றில் தன்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்து விட்டதாக றிஸ்மியா தெரிவித்துள்ளார்.
சவூதியில் ஏழு வருடங்களாக தாம் உழைத்த பணம் முழுவதையும் காஜா மொகைதீனிடம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தான், பல நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடம் உதவி கோரியிருந்தேன் உதவி கிடைக்காத நிலையிலேயே 20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ததாக றிஸ்மியா கூறியுள்ளார்.

ad

ad