புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2013


புலிகளை சந்தித்த நியூசீலாந்து நாடாளுமன்ற உறுப்பினரை பின்தொடர்ந்த புலனாய்வுத்துறை


அவர் 2003-ல் கிளிநொச்சிக்கு வந்து புலிகளின் அரசியல் தலைமையைச் சந்தித்த வேளை அவர் உளவுத்துறையின் ரகசியப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறார். இதைத் தெரிவித்த அவர் தா
ம் மட்டுமின்றி வேறு 88 நீயூலாந்தினரையும் அவ்வுளவு நிறுவனம் கண்காணித்ததற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டுள்ளார்.நியூசீலாந்தின் முந்நாள் கிரீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் லோக் தம்மை அந்நாட்டு அரசின் எஸ்.ஐ.எஸ்.இன் உளவாளிகள் ஈழத் தமிழர் விடயத்தில் கண்காணித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த வேளை அவர் கிளிநொச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஓர் இடைக்கால அரசு சுயாட்சி அரசு அமைப்பது குறித்த திட்டமொன்று நார்வே குழுவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.ஆனால் அது குறித்த எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கப்பட வில்லை என்று 2009 ஜூனில் நியூசீலாந்து நாடாளுமன்றத்தில் பேசுகையில் கீத் லோக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இருதரப்பின் மீதும் குற்றச் சாட்டுக்கள் வைக்கப்பட்டாலும், சர்வதேசம் இலங்கை அரசின் மீது போதிய அழுத்தம் தரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
2002 – 2005-ல் புலிகள் அமைப்பு சிறிலங்கா அமைப்பினால் சட்டபூர்வ அமைப்பாக்கப்பட்டிருந்தாலும் மேற்கு நாடுகள் அவர்களை பயங்கரவாத அமைப்பு என்றே கருதி வந்ததை குறிப்பிட்டார். ஆனால் புலிகளால் கொல்லப்பட்டோரை விட, அரசினால் கொல்லப்பட்டோர் தொகை பற்பல மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கண்ட எஸ்.ஐ.எஸ். உளவு அமைப்பு ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, நியூசீலாந்து ஆகிய ஐந்து நாடுகளால் இயக்கப்படுவது ஆகும். இந்த உளவு அமைப்பு குறிப்பாக ஈழப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டதா என்பது இன்னமும் தெரிந்து கொள்ளப்படவேண்டும்.

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-veevupaarththanew1.jpg

ad

ad