புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27

அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு,
பால் விலை, பஸ் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வு என அதிருப்திகள் இருந்தாலும் இலங்கை விவகாரம், காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்துள்ளது.வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப் போவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம்: அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது.
2ஜி விவகாரம், இலங்கை.. திமுக மீது அதிருப்தி… அதே நேரத்தில் 2ஜி விவகாரம், இலங்கை விவகாரத்தில் காங்கிரசுடன் கடைசி வரை இருந்து விட்டு வெளியேறிய திமுக மீது அதிருப்தியே நிலவுகிறது. இதனால் கடந்த முறை 18 இடங்களில் வென்ற திமுகவுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும்.
காங்கிரசுக்கு தமிழகத்தில் முட்டை… தமிழகத்தில் காங்கிரசின் கதையை கேட்கவே வேண்டாம். அதனுடன் கூட்டணி அமைக்கவும் யாரும் முன் வராத நிலையில் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
முலாயமுக்கு 35 இடங்கள்- மாயாவதிக்கு 26 இடங்கள்: அதே போல முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெல்லும். அந்தக் கட்சி 35 இடங்களைப் பிடிக்கவுள்ளது. முலாயம் சிங்கின் போட்டியாளரான மாயாவதியின் சமாஜ்வாடி கட்சி 26 இடங்களைப் பிடிக்கும். உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 61 இடங்களை இந்த இரு கட்சிகளுமே பங்கிட்டுக் கொள்ளப் போகும் நிலையில், காங்கிரசுக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும். கடந்த முறை இங்கு 21 இடங்களை காங்கிரஸ் பிடித்தது. அதே போல பாஜகவுக்கும் அதிகபட்சம் 10 இடங்கள் கூட கிடைக்காது. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வெல்லாத இந்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வர முயற்சிப்பது பெரும் கனவாகவே இருக்கும்.
நிதிஷ்குமாருக்கு 19 கேரண்டி.. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதால் பாஜகவுடன் மோதலில் இருக்கும் நிதிஷ்குமாருக்கு 19 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பிகாரில் மொத்தமுள்ள 45 இடங்களில் கடந்த தேர்தலில் 20 இடங்களில் நிதிஷ்குமார் வென்றார். அவரது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும் 11 இடங்கள் கிடைத்தன. இந்தமுறை இரு கட்சிக
ஆந்திராவில் ஜெகன்மோகன்-டிஆர்எஸ்… ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனிக் கட்சி துவக்கிய ஜெகன்மோகன் ரெட்டியில் அலை கொஞ்சம் ஓய ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அவரது கட்சி 12 இடங்களில் வெல்லும் என்று தெரிகிறது. இந்த மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் 10 இடங்கள் வரை வெல்லக் கூடும். இதனால் காங்கிரசுக்கு 8 இடங்களே கிடைக்கும். கடந்த தேர்தலில் 33 இடங்களில் காங்கிரஸ் வென்றிருந்தது. அதே போல தெலுங்குதேசம் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடம் கிடைப்பதே கஷ்டம்.
மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கே வெற்றி… மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கே வரும் தேர்தலில் 27 இடங்கள் கிடைக்கவுள்ளன. அடுத்த இடத்தை இடதுசாரிகள் பிடிக்க, காங்கிரஸ் ஓரிரு இடங்களில் வெல்வதே கடினம். பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது. கடந்த தேர்தலில் மம்தாவுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரசுக்கு நல்ல பலன் கிடைத்தது.
ஒடிஸ்ஸாவில் நவீன் பட்நாயக்: ஒடிஸ்ஸா மாநிலத்தில் பாஜவை கழற்றிவிட்ட பிஜூ ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு மக்களிடையே ஆதரவு சரியவே இல்லை. இங்குள்ள 20 தொகுதிகளில் 13 இடங்களில் அந்தக் கட்சியே வெல்லும்.
கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள்.. கடந்த தேர்தலில் அடியோடு காலியான இடதுசாரிகளுக்கு இந்தமுறை கேரளா கை கொடுக்கவுள்ளது. அங்கு மீண்டும் இடதுசாரிகளுக்கே அதிகமான இடங்கள் கிடைக்கவுள்ளன. காங்கிரஸுக்கு பெரும் தோல்வி காத்துள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடதுசாரிகள் மொத்தத்தில் 27 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி பாஜகவுக்கு.. மகாராஷ்டிரத்தில் சரத்பவார்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் சரிவும், சிவசேனா-பாஜக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியும் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. அதே போல குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் மீண்டும் பாஜகவுக்கே வெற்றி காத்திருக்கிறது. ராஜஸ்தானில் கடந்த முறை 20 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு வெறும் 8 இடங்களே கிடைக்கும். 4 இடங்களில் வென்ற பாஜகவுக்கு 17 இடங்கள் கிடைக்கும். டெல்லியில் பாஜக 6 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் மட்டுமே வெல்லும். குஜராத்தில் பாஜகவே 20க்கும் அதிகமான இடங்களில் வெல்லும்.
பாஜகவை கர்நாடகம் கைவிடுகிறது… ஆனால், கர்நாடகத்தில் பாஜகவுக்கு மாபெரும் தோல்வி காத்திருக்கிறது என்கிறது கருத்துக் கணிப்பு. இங்குள்ள 28 தொகுதிகளில் காங்கிரசுக்கே 18 இடங்கள் வரை கிடைக்கும் என்று சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. கடந்த முறை கர்நாடகத்தில் காங்கிரஸ் 6 இடங்களில் தான் வென்றது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு 7 இடங்களே கிடைக்கும்.

ad

ad