புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


கெய்ல் சாதனை சதம்: பெங்களூர் அணி 263 ரன்கள் குவிப்பு

இந்நிலையில் அணியின் ஸ்கோர் 167ஐ தொட்டபோது, தில்ஷான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கெய்ல், 150 ரன்னைத் தொட்டார். இதற்கிடையே 11 ரன்கள் மட்டுமே எடுத்த இளம் வீரர் கோலி ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
டிவில்லியர்சும் தன் பங்கிற்கு புனே பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை உயர்த்தினார். 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் விளாசினார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் கெய்ல் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே ஐ.பி.எல். போட்டிகளில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.
இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் புனே அணி களமிறங்கியது.

ad

ad