புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2013

சிறைத்தண்டனைக்கு பதில் சமையல் பயிற்சி: புதிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி

சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நீதிபதி கொள்ளை, திருட்டு, அடிதடி, வழிப்பறி போன்ற 39 குற்றங்களைச் செய்த ஒருவருக்குச் சிறைத்தண்டனை வழங்காமல் சமையல் பயிற்சி பெறுமாறு தண்டித்துள்ளார்.
கடப்பாரையால் ஒருவரை அடித்த குற்றத்திற்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் மோசெர்(Peter Moser), ஒரு தேர்ந்த சமையல்காரரிடம் பயிற்சியாளராகச் சேரும்படி உத்தரவிட்டார்.
மேலும் சமையல் வேலை தெரிந்தால் இவர் திருந்தி வாழ முடியும், திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட மாட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் இவர் தன்னுடைய சமையல் பயிற்சியை நிறைவு செய்யவில்லை என்றால் மூன்றரை வருடம் சிறைத்தண்டனை பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
திருடனின் சட்டதரனியும் நீதிபதியின் புதுமையான தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

ad

ad