புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013

ஹசியின் அபார ஆட்டத்தால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியின் 30-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
விளையாடியது. டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் வாட்சன், ரகானே சிறப்பாக விளையாடி மளமளவென ரன் சேர்த்தனர். பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசிய வாட்சன் விரைவில் அரை சதம் கடந்தார்.

அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்தபோது இந்த ஜோடியை, அஸ்வின் பிரித்தார். அவரது பந்தை அடித்து ஆட முற்பட்ட ரகானே (16 ரன்) போல்டானார். யாக்னிக் (7 ரன்), டிராவிட் (6 ரன்) ஆகியோரும் விரைவில் பெவிலியன் திரும்பினர். 

அதன்பின்னர் வாட்சனுடன், பின்னி இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடியும் சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்தது. ஆக்ரோஷமாக ஆடிய வாட்சன், 60 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ஐ.பி.எல். தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த மொத்த ரன்கள் 101. 

பின்னர் பின்னியுடன், ஹாட்ஜ் இணைய, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. பின்னி 36 ரன்களுடனும், ஹாட்ஜ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் அஸ்வின், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக விஜய் மைக் ஹசி களமிறங்கினார்கள் விஜய் 3 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ஹசியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியை வெற்றி நோக்கி எடுத்து சென்றனர்.

சிறப்பாக விளையாடிய ரெய்னா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹசி 88 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 16.1 ஓவரில் 154 ரன் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் டோனி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றிபெற 11 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை  வாட்சன் வீசினார். முதல் பந்தில் மோரிஸ் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை சந்தித்த பிராவோ ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தை டீப் கவர் திசையில் அருமையாக தூக்கி சிக்ஸர் விளாசினார். இதனால் கடைசி 3 பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார்.

5-வது பந்தில் 2 ரன் எடுத்து வெற்றி பெற செய்தார். இதனால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad