புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013


6ஆவது ஐ.பி.எல். : பெங்களூர் - மும்பை அணிகள் நாளை மோதவுள்ளன

ஐ.பி.எல்.போட்டியின் 2-வது லீக் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் பொண்டிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ{ம் வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சஸ{ம் மோதவுள்ளன.
சொந்த மைதானத்தில் வெற்றியின் கணக்கை தொடங்க பெங்களூர் அணி ஆர்வத்துடன் உள்ளது. பெங்களூர் அணியின் முதுகெலும்பாக கிறிஸ் கெயல் உள்ளார். இவரைத் தவிர டில்சான், டிவில்லியர்ஸ், வீராட் கோலி, புஜாரா மற்றும் திவாரி போன்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களும் வெட்டோரி, முரளிதரன், சகீர்கான், வினய்குமார் மற்றும் முரளி கார்த்தி போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டிவில்லியர்ஸ் இன்னும் அவ் அணியோடு இணையவில்லை. இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவதில் கேள்விக்குறியே.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தலைவரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, டெண்டுல்கர், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், போலார்ட், சுமித், அம்பதி ராயுடு மற்றும் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் மலிங்க, ஓஜா, ரிஷி தவான் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.

ad

ad