புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013


6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று பஞ்சாப் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட்- மந்தீப் சிங் களம் இறங்கினார்கள். கில்கிறிஸ்ட் 27 ரன் எடுத்த நிலையில் பாதியா பந்தில் ஆட்டம் இழந்தார். மந்தீப் சிங் 25 ரன்னில் காலிஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த வோரா 31 ரன்களும், டேவிட் ஹசி 21 ரன்களும், குர்கீரத் சிங் 28 ரன்களும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
 
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது.
 
தொடக்க வீரர் காம்பீர் 8 ரன்னிலும், அதன்பின் வந்த யூசுப் பதான் முதல் பந்திலேயும் அவுட் ஆனார்கள். 3-வது விக்கெட்டுக்கு பிஸ்லாவுடன் காலிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கொல்கத்தா அணியின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது காலிஸ் 37 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
 
அடுத்து 4-வது விக்கெட்டுக்கு மோர்கன் ஜோடி சேர்ந்தார். இருவம் கொல்கத்தா அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். கடைசி 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மோர்கன் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
 
கொல்கத்தா அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிஸ்லா 51 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

ad

ad