புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2013


கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி முத்து லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்
கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுமி முத்து லட்சுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டாள். இருப்பினும் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தாள்.


பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். சிறுமி அலறியவாறு உள்ளே விழுந்ததால் தந்தை பதட்டமடைந்தார்.
7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டாள். அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது. தந்தை பாண்டியன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிறுமியின் குரல் அருகிலேயே கேட்டதால் சேலையை குழாய் கிணற்றில் போட்டனர். அதை சிறுமி பிடித்துக் கொள்ள மேலே தூக்கினார்கள். ஆனால் வழியில் பாறைகள் இருந்ததால் சிறுமியால் மேலே வர முடியாமல் சத்தம் போட்டாள். இதனால் அந்த திட்டத்தை கைவிட்டனர். உடனே தீயணைப்பு படையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்கும் முயற்சியில் துரிதமாக செயல்பட்டனர்.
3 பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் சிறுமி விழுந்த குழியைச் சுற்றிலும் பக்கவாட்டிலும் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
அந்த இடம் பாறைகள் நிறைந்த பகுதி என்பதாலும், குழிக்குள் குழாய்கள் இல்லாததாலும் மண் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் மீட்பு பணி மெதுவாக நடந்து வருகிறது. இதனால் சிறுமியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. சிறுமியை உயிருடன் மீட்க போராடினர். 108 ஆம்புலன்சும் மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அசைவை கண்ணகாணிக்க கேமரா செலுத்தப்பட்டது. 
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, எஸ்.பி., சந்தோஷ் குமார், கரூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் சக்திவேல், ஏ.எஸ்.பி., ஜியாவுல்ஹக், ஆர்.டி.ஓ., நெல்லைவேந்தன், தாசில்தார் மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். சம்பவ இடத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கவலையுடன் கூடியிருந்தனர்
சுமார் 16 மணி நேரத்திற்கு பிறகு இரவு சிறுமி மீட்கப்பட்டாள். மீட்கப்பட்ட சிறுமி முத்து லட்சுமி 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள். செயற்கை சுவாசம் அளித்தும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவி மூலம் மீட்பு பணி மாலை 5 மணி அளிவில் துவங்கியது. மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவி மூலம் நடந்த மீட்புப்பணிகள் தோல்வியடைந்தது. இதையடுத்து மீண்டும் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதன் காரணமாக மீட்புப்பணிகள் தாமதமாகின.

ad

ad