புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013




           துரை சர்க்யூட் ஹவுஸைச் சுற்றி 9-ந் தேதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காரணம் ஒரு கல்லூரி விழாவிற்காக வந்திருந்த கவர்னர் ரோசய்யா அங்கேதான் ஹால்ட் அடித்திருந்தார். அப்போது கட்டிட ஒப்பந்ததாரரான மார்நாடும்nakeeran அவரோடு சிலரும் அங்கே சென்றனர். அவர் களை போலீஸ் தடுக்க, ‘""சார், பி.டபிள்யூ.டி உதவி செயற் பொறியாளர்களான ஞானசேகரனும் போஜிராஜனும் எங்க ளை வரச்சொன்னாங்க'' என்றார் மார்நாடு. ‘""சரி, முன்பக்கம் போகாதீங்க. அங்க கவர்னர் இருக்கார். நீங்க தேடிவந்த ஆபீ சர்கள் பக்க வாட்டு  அறைகளில் இருக் காங்க. அங்க போங்க'' என்றனர் பாதுகாப்புக் காக்கிகள். குறிப்பிட்ட அறைக்குள் ஒப்பந்ததாரர் மார்நாடு மட்டும் உள்ளே போக, உடன் வந்தவர்கள் வெளியே காத்திருந்தனர். ஒப்பந்ததாரரைப் பார்த்த அந்த ரெண்டு அதிகாரிகளும் ‘""வாய்யா காண்ட்ராக்டர். ஒரு லட்சம் கொண்டாந்தியா?'' என்று கேட்க,  எடுத்து வந்த கரன்ஸிக்கட்டுகளை எடுத்துக்கொடுத்தார் மார்நாடு.

’""இதை முதல்லயே செஞ்சிருக்கலாம்ல? காண்ட் ராக்ட் வேலைன்னா பத்து பர்சண்ட் கமிஷன் தரணும்ன்னு உனக்குத் தெரியாதா? இனி வெறும்கையோட வராத. புரிஞ்சிதா? நாளைக்கு வந்து உன் செக்கை வாங்கிட்டுப் போ'' என்றனர் சிரித்துக்கொண்டே. அப்போது வெளியே நின்றவர்கள் உள்ளே வர, கரன்ஸிக்கட்டுக்களோடு உட்கார்ந் திருந்த அந்த இரண்டு பொறியாளர்களும் ""யோவ் யாருய்யா?  யாரைக்கேட்டு உள்ளே வர்றீங்க? போங்க வெளில'' என கோபமாகச் சத்தம் போட, வந்தவர்களோ ’""நாங்க விஜிலன்ஸ் அதிகாரிகள். நீங்க லஞ்சம் வாங்கியதைக் கையும் களவுமா பிடிக்கவந்தோம்'' என்றனர் கூலாய்.


அதிர்ந்துபோன அதிகாரிகள், படீரென எழுந்து பாத்ரூமுக்குள் ஓடி கதவைத் தாழிட்டுக் கொண்டனர். விஜிலன்ஸ் அதிகாரிகளோ ""நீங்க லஞ்சம் வாங்கியது உறுதியாயிடிச்சி. நீங்க இனி ஒளிஞ்சி பிரயோஜனம் இல்லை. நீங்களா எங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தா உங்களுக்கு நல்லது'' என எச்சரிக்க, பாத் ரூமுக்குள் ஒளிந்திருந்த அதிகாரிகள், தலை கவிழ்ந்த படியே வெளியே வந்தனர். லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்த விஜிலன்ஸ் அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய பொ.ப.து உதவி செயற்பொறியாளர்கள் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களைக் கைது செய்யக் காரணமாக இருந்த ஒப்பந்ததாரர் மார்நாடு நம்மிடம் ""மதுரையில், கால்நடைத்துறைக்கு ஒரு பாலிகிளினிக் கட்டும் காண்ட்ராக்ட்டை 26 லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்தேன். எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு எனக்கு வரவேண்டிய 10 லட்ச ரூபாயைக் கேட்டுப்போனேன். அப்ப இந்த ரெண்டு  என்ஜினியர் களும் உனக்கான 10 லட்ச ரூபா செக் வேணும்ன்னா அதில் 10 பர்சண்ட் தொகையைக் கொடுத்துட்டு வாங்கிட்டுப்போ. இல்லைன்னா இந்த ஜென்மத்தில் செக்கை வாங்க முடியாதுன்னு கறாரா சொன்னாங்க'' என்றார் ஆதங்கமாய். நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர், ‘""இப்ப மாட்டியிருக்கிறது சின்ன மீன்கள். ஆனா பெரிய பெரிய ஊழல் திமிங்கிலங்கள் எல்லாம் பொதுப்பணித்துறையில் இருக்கு. அதிக லஞ்சம் புழங்குற துறைகளில் ஒன்றா இந்தத் துறை இருக்கு'' என்றார் அழுத்தமாக.

பொ.ப.து.வில் என்ன நடக்கிறது என அந்தத் தரப்பிலேயே விசாரித்தபோது கிறுகிறு தகவல்கள் நிறைய கிடைத்தன. நம்மிடம் மனம் திறந்து பேசிய அந்த அதிகாரி ‘""துறையே டாப் டூ பாட்டம் லஞ்சமயமா இருக்கு. துறையின் முக்கிய கேரக்டர்களை முதல்ல உங்களுக் குச் சொல்றேன். துறைக்கு மந்திரியா இருப் பவர் கே.வி.ராமலிங்கம். அமைச்சருக்கு கீழ் மூன்று பிரதான பி.ஏ.க்கள் இருக்காங்க. அதில் கிங் மாதிரி இருப்பவர் டெக்னிக்கல் பி.ஏ. காமராஜ். அடுத்த நிலையில் ஸ்பெஷல் பி.ஏ.பாலசுப்பிரமணியும் சீனியர் பி.ஏ. மாலிக்கும் இருக்காங்க. இதில் துறையின் கடிவாளத்தையே கையில் வச்சிருக்கவர் காமராஜ்தான்.. ஒரு கட்டத்தில் அவர் துறையின் மாண்புமிகு போலவே செயல்பட, இதனடிப்படையில் போன புகார்களின் பேரில் அவரை 6 மாதம் பழைய இடத்துக்குத் துரத்தினாங்க. பிறகு 6 மாதத்திற்குப்பின் மீண்டும் டெக்னிக்கல் பி.ஏ.வா டெக்னிக்கலா வந்துட்டார்.

அடுத்து பொ.ப.து.வின் பிரதான பணிகள் என்னன்னு கேட்டா, ஒன்று அரசு கட்டிடங்களின் கட்டுமானப் பணி. ரெண்டு அதை பராமரிக் கும் பணி,  மூன்று தமிழக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் பணி. இதில் கட்டுமானப்பணின்னு எடுத்துக்கிட்டா அது சென்னை மண்டலம், திருச்சி மண்டலம், மதுரை மண்டலம்ன்னு மூன்றா பிரிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு மண்டலத்தையும் கவனிக்க முதன்மைப் பொறியாளர் எனப்படும் சி.இ. இருப்பாங்க. இப்ப சென்னை மண்டல சி.இ.யா இருப்பவர் கோபால கிருஷ்ணன், திருச்சிக்கு ஒரு சி.இ.யும் மதுரைக்கு ஒரு சி.இ.யும் இருந் தாலும் சகல வேலைகளுக்கும் சூத்ரதாரியா இருப்பவர் கோபாலகிருஷ் ணன்தான். காரணம், என்ஜினியரிங் சீஃப் ஜெனரல் என்கிற உயர் பதவியிலும் உட்கார்ந்துகிட்டார். அதனால் மற்ற இரண்டு மண்டல சி.இ.க்களும் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டனர். இவரும் டெக்னிக்கல் பி.ஏ. காமராஜும்தான் துறையின் அத்தனை கோல்மால்களுக்கும் ரூட் போடறவங்க. இதில் கோபால கிருஷ்ணனின் பதவிக்காலம் போன மே-யிலேயே முடிந்தாலும் இவர் சரியா டீலிங்கு களை கவனிப்பதால் அவரை இன்னும் பதவி நீட்டிப்பில் உட்கார வச்சிருக்காங்க.  மூன்று மாதத்திற்கு முன் இவரது மகள் திருமணம் நடந்தது. 1500 பத்து கிராம் தங்கக் காசுகள் துறை அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள்  மூலம் மொய்யாகக் கிடைச்சிது. அதுக்கு ஒரு மாதம் முன்பாக முகப்பேரில் ஒரு பங்களா கட்டினார். அதில் மொய்யா விழுந்தது 1000 பத்து கிராம் தங்கக் காசுகள். இப்படிப் பட்ட முக்கிய கேரக்டர்கள்தான் துறையின் அத்தனை ஏடாகூடங் களுக்கும் காரணம். பர்சன்டேஜ் விவகாரங்களை யாராவது ஒரு ஒப்பந்ததாரரிடமே விசாரிங்க. புட்டுப்புட்டு வைப்பாங்க'' என்றார்.


அதிகாரிகளின் லஞ்சத் தொல்லை தாங்காமல், அவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் சிக்கியவர் ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜன். துறையின் லஞ்ச விவகாரங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது ‘நான் அறிந்த தகவல்களை விபரமாவே சொல்றேன். ""30 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டப்பணிகளுக்கு மேலிடத்துக்கு 6%, துறை மாண்புக்கு 3%, அதிகாரிகள் குரூப்புக்கு 3%-ன்னு மொத்தம் 12 % கமிஷன் கொடுக்கணும். இது எங்களுக்குக் கட்டுப்படியாகாதுன்னு ஒப்பந்ததாரர்கள் போர்க்கொடி பிடிச்சதால் 12%-ஐ 10% ஆக குறைச் சாங்க. அதுவும் கட்டுப்படியாகாது 6% தர்றோம்ன்னு ஒப்பந்ததாரர்கள் சொல்ல, கட்டுமானப்பணிகள் இப்ப தேக்கமடைஞ்சிருக்கு. அதே சமயம் கட்டிடப்பராமரிப்பு வேலைகள்லயும் நீர் ஆதாரங்கள் புனரமைப்புப் பணிகளிலும் இப்ப ஏகத்துக்கும் லஞ்சம் கோடிக் கணக்கில் புழங்குது. எப்படி தெரியுமா? 

ஒரு பராமரிப்புப் பணிக்கு ஒரு கோடி ரூபாயை ஒதுக்கினால் அதில் 20% தொகையை மட்டும் செலவிட்டுவிட்டு மீதமுள்ள 80%-ஐ மேலிடம் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பிரிச்சிக்கிறாங்க. சென்னையில் நீதிபதிகள் பங்களா, மந்திரிகள் பங்களா, கிங் இன்ஸ்டியூட், சேப்பாக்கம் வளாகம், எழிலகம் இந்த கட்டிடங்களை மட்டும் பராமரிக்க வருடத்துக்கு 32 கோடி ஒதுக்கப்படுது. நீதிபதிகள், மந்திரிகள் பங்களாக்களை மட்டும் பராமரிச்சிட்டு மத்தக் கட்டிடங்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க. இதேபோல் உயர்நீதி மன்றம், அதன் வளாகம், தலைமைச்செயலகம், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சமாதிகள் போன்றவற்றைப் பராமரிக்க ஆண் டுக்கு 16 கோடி ஒதுக்கப்படுது. இதிலும் அவங்க 5 கோடி அளவுக்கு வேலை செய்யறதே பெருசு. அதேபோல் நாமக்கல் மாளிகையை வலிமைப்படுத்தி விரிவுபடுத்த 20 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை மேலிடத்துக்கு நெருக்கமான கன்ஸ்ட்ரக்ஷனுக்கே கொடுக்கப்பட்டது. எப்படி வேலை நடந்ததுங்கறதுக்கு, ஒரு உதாரணம் சொல்றேன், தரை தளத்தில் கம்பி பதிப்பதுபோல் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, அதன் பின் கம்பிகளை உருவிட்டாங்க. சென்னையில் நடக்கும் இந்த பராமரிப்புப் பணிகளை கவனிப் பவர்கள் பொதுப்பணித்துறை இ.இ.ரவிராஜ், ஏ.இ.ஸ்கொயர் ஸ்ரீதரன், ஏ.இ.குழந்தையன் ஆகியோர். எதனால் இப்படி தரமில்லாமல் பராமரிப்பு வேலைகள் நடக்குதுன்னா...

பொதுவாக டெண்டர் தொகை யில் 30%-ஐ மேலிடத் துக்கும் மந்திரிக்கும் கொடுக்கணும்ன்னு சொல்லி வாங்கிட றாங்க. இதை மட்டும் டெண்டர் கோரும் போதே செட்டில் செய்திடணும். அடுத்து செகரட்டரி, சி.இ., எஸ்.இ. ஆகி யோருக்கு தலா 1% (இதில் எல்லா செகரட்டரிகளும் வாங்குவார்கள் என்று சொல்ல முடியாது) அடுத்து எக்ஸிகியூட்டிவ் என்ஜினிய ருக்கு 5%, ஏ.இ.ஸ்கொயருக்கு 5%, ஏ.இ.க்கு 5%, ஒர்க்கிங் இன்ஸ்பெக்டருக்கு 3%, பிளானிங் சூப்பிரண்ட், ட்ராஃப்ட்ஸ் மேன், ஜூனியர் டிராஃப்ட்ஸ் மேன், ஆடிட்டர், ஆடிட்டிங் ஆபீஸர்,சப்-டிவிஷனல் சூப்பிரண்ட் ஆகியோருக்கு தலா1% என கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும். இது தவிர வருமான வரி 2%, சேல்ஸ் டாக்ஸ் 4%, நிலுவைத் தொகை 2.5 % போய்விடும். இப்படி 65-ல் இருந்து 70 சதம்வரை போய்விடும். மிச்ச 30 சதவீத தொகையில் வேலையை முடித்துவிட்டு அதில் லாபமும் பார்த்தாகவேண்டும். இதனால்தான் அரைகுறை வேலைகள் கூட நடப்பதில்லை. நீர் ஆதாரங்களான ஏரி, குளம் வாய்க்கால் போன்றவற்றை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளிலும் ஏறத்தாழ இதே சதவீதத்தில்தான் கமிஷன் பிரிக்கப்படுகிறது.



புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவ மனையா மாத்தறதுக்காக 23 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டாங்க. அதில் 5 கோடி ரூபாய்க்கான வேலையை மேலிடத்துக்கு நெருக்கமான  நிறுவனத்திடம் கொடுத்தாங்க. வழக்கு களால் வேலை இழுபட்டபோதும், கொடுக்க வேண்டிய கமிஷனை சரியாக் கொடுத்துவிட்டது இந்த நிறுவனம். திருவள்ளூர் மாவட்ட நேமம் ஏரியை அகலப்படுத்தும் திட்டத் திற்காக 80 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த வேலையை பகுதி பகுதியாகப் பிரித்து கொடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் கமிஷன் கொடுப்பதில் சரியாக இருக்கும் அந்த நிறுவனத்திடமே மொத்தமாக 80 கோடி ரூபாய் காண்ட் ராக்ட்டையும்  கொடுத்துவிட்டார்கள்.  இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலுமாக தமிழ்நாடு முழுக்க நடக்கும் கட்டிட பராமரிப்புப் பணிகளிலும் நீர் ஆதார பராமரிப்புப் பணியிலும் கோடிகோடியாய் அள்ளிக்கொண்டிருக்கிறார் கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில் நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாக்க 3 ஆயி ரத்து முன்னூற்று 14 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் அறிவிச்சிருக் காங்க இதில் 70% வரை கமிஷனாகப் போனால் என்ன மிஞ்சப்போகுது. ஊழல் வாதிகள் பைக்கு எவ்வளவு கோடிகள் போய்ச்சேரப்போகுது ? கணக்குப் போட்டுப் பார்த்துக்கங்க'' என் கிறார் அழுத்தமாகவே. 

பொதுப்பணித் துறையில் மட்டுமல்ல நிதி புழங்கும் அனைத் துத் துறைகளிலும் இதே கொள்ளைதான்.

-இளையசெல்வன், ராமகிருஷ்ணன், முகில்
படங்கள் : அண்ணல்,
ஸ்டாலின், அசோக்

ad

ad