புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2013


பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் குழுவில், மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெறவில்லை. 
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் குழுவில், தற்போது மாநில முதல்வராக உள்ளவர்களில், நரேந்திர மோதி மட்டுமே,
மத்திய ஆட்சிமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இதுதவிர, நஜ்மா ஹெப்துல்லா, ஹேமா மாலினி, சாந்த குமார் ஆகிய துணைத் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். யஷ்வந்த் சின்கா, வசுந்த்ரா ராஜே ஆகியோருக்கு எந்தக் குழுவிலும் இடம் அளிக்கப்படவில்லை. கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ரவி சங்கர் பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர், பாரதிய ஜனதாவில் உண்மையான உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. என்றார். அதனால் தான், கடந்த ஒரு வாரமாக ராஜ்நாத் சிங் அனைத்து மூத்த தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி, இந்த பட்டியலை தயாரித்துள்ளதாக தெரிவித்தார். இதில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் உள்ளன. சமூக ரீதியாகவும், மண்டல ரீதியாகவும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு, இளமைக்கும், அனுபவத்துக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ad

ad