புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


இறுதிச்சடங்கின் போது எழுந்து உட்கார்ந்த பிணம் :
உறவினர்கள் அதிர்ச்சியில் ஓட்டம்
திருமங்கலம் அருகே ஆஸ்பத்திரியில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்பட்டவர், வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்கு செய்தபோது, பிழைத்து எழுந்தார்.


திருமங்கலம் அருகே தும்மக்குண்டைச் சேர்ந்தவர் அசோகன்,45. தி.மு.க., கிளைச் செயலாளர். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். 
சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாக, மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
நேற்று மதியம் அவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள், அவரது உடலை சொந்த ஊரான தும்மக்குண்டிற்கு கொண்டு சென்று, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மாயானத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, அசோகன் உடல் மீது தண்ணீர் ஊற்றியபோது, அவர் உடல் அசைந்தது. அவர் மயக்கத்தில் இருந்து மீண்டவர் போல் எழுந்து அமர்ந்துள்ளார்.
அவரது உடலை சுற்றி நின்ற உறவினர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர், சாவகாசமாக எழுந்த அசோகனுக்கு, அவரது மனைவி அமிர்தம் மற்றும் உறவினர்கள் பழச்சாறு கொடுத்துள்ளனர். அதை குடித்த அசோகன், புதுத் தெம்புடன் நடக்க துவங்கினார். தற்போது தான் நன்றாக இருப்பதாக, உறவினர்களிடம் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதே போல், டி.கல்லுப்பட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த நடராஜன், அதே தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியபின், வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்தபோது, உயிர் பிழைத்து எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

ad

ad