புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2013


வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை!- மாவை
வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் வடமாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா நிறுத்தப்படுவார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், 
சிங்கள ஊடகம் வெளியிட்ட தகவலை  அவர் மறுத்ததுடன், வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பதை அரசாங்கம் உறுதியாக அறிவிக்கும் வரையில் எதனையும் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த வருடம் இடம்பெறக்கூடிய வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் எனினும், அதன் வேட்பாளர்கள் குறித்த தீர்மானங்கள் எவையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாண சபை தேர்தல்களுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி தற்போதே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு ஒன்று இந்த வாரம் வடமாகாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.
அங்கு பல்வேறு தரப்பினருடன் சந்திப்பை ஏற்படுத்தி, இந்த தேர்தல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த வருட இறுதிக்குள் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ad

ad