புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


திமுக வெளியே - தேமுதிக உள்ளே
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால்,  ’’தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தினமும் அவர்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் பேசவும், பிரதான எதிர்க்கட்சி என்ற
முறையில் அதிக நேரம் கொடுத்து அக்கட்சி உறுப்பினர் விவாதத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் வழங்கி வந்தேன்.

ஆனாலும் அவர்களுக்கு சபாநாயகர் வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் 41 நிமிடங்கள், 46 நிமிடங்கள் என பேசி விட்டு இறுதியில் ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்பி அவை நடவடிக்கைக்கு குந்தகம் செய்து வெளிநடப்பு செய்ததுடன் தங்களுக்கு உரிய வாய்ப்பும், நேரமும் தரவில்லை என்று உண்மைக்கு மாறாக தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையால் இதர கட்சி உறுப்பினர்களுக்கு உரையாற்றும் வாய்ப்பு பாதிக்கப்பட்டது. மற்ற கட்சி உறுப்பினர்கள் பேச பங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக தே.மு.தி.க. உறுப்பினர்களை விவாதத்தின் இறுதியில் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்றேன்.
ஆனாலும் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 4 நாட்களாக வெளிநடப்பு அல்லது வெளியேறறம் கட்டாயத்தை உருவாக்கினார்கள்.
ஆனாலும் ஜனநாயக கடமைகளை ஆற்ற அவர்களுக்கும் வகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரின் கருத்தின் அடிப்படையில் தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் பேசும் வாய்ப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
தே.மு.தி.க. உறுப்பினர்கள் சபையை நடத்த எனக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் தொடர்ந்து ஏற்கனவே நடந்து கொண்டது போல் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையையும் இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.
இதையடுத்து இனி தேமுதிக சட்டசபைக்கு செல்கிறது.   இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் திமுக நீக்கம் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று அரக்கோணம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவி, தாழ்த்தப்பட்ட மக்களின் சம்பந்தி என தம்பட்டம் அடித்துக் கொண்டு.... என பேச தொடங்கினார். 
உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரவி எம்.எல்.ஏ. பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. 
இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபையை நடத்த முடியாத அளவுக்கு கூச்சல்-குழப்பம் நிலவியது. உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 
உடனே துரைமுருகன் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபை காவலர்கள் வெளியேற்றினார்கள். அதன் பிறகு சபாநாயகர் கூறுகையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4-வது முறையாக வெளியேற்றம் செய்யப்ப ட்டுள்ளனர். எனவே அவர்கள் பேரவை விதிப்படி இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ளமுடியாது என்று அறிவித்தார்.

ad

ad