புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2013


ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பு!- பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!-விகடன் 
ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அது. 'இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையும் மத்திய அரசும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது’ என்று அந்தக் கட்சிக்குள்ளேயே பலர் நினைக்கின்றனர்.
இந்த அணிக்குத் தலைமை தாங்குபவராக ஜி.கே.வாசன் இருக்கிறார். அவரைச் சந்திக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன்வெல்த் நாடுகள் ஆலோசித்து மாற்று இடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இலங்கையை அழைத்துக் கண்டிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழகத்தில் போராடும் மாணவர்களின் உணர்வை நான் மதிக்கிறேன்’ என்று ஜி.கே.வாசன் சொன்னது மத்திய அரசை அதிரவைத்தது. டெல்லியில் இருந்து அவருக்கு தொடர்ந்து போன் வர ஆரம்பித்தது.
அதற்கு மறுநாள் நிருபர்களைத் தற்செயலாகச் சந்தித்த ஜி.கே.வாசன், அதனை மறுபடியும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி கிளம்பிச் சென்ற அவர், கடந்த 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதமரைச் சந்தித்தார். கையோடு ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றார் வாசன். அவர் கொடுத்த கடிதத்தைப் படிக்கப் படிக்க, பிரதமரின் முகம் கடுகடுவென மாறியிருக்கிறது.
இலங்கை அரசின் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. அங்கேதான் நடக்கும் என்று சொன்னால், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது’ என்று ஜி.கே.வாசன் சொன்னதும், 'இது இந்தியாவின் இராஜதந்திர நிலைப்பாடு சம்பந்தப்பட்டது.
எனவே, நாம் நினைத்த மாதிரி எல்லாம் செயல்பட முடியாது’ என்றாராம் பிரதமர். 'மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் செயல்படுவதாகக் காட்ட இத்தகைய நடவடிக்கை அவசியம்’ என்று ஜி.கே.வாசன் சொல்ல, 'டிப்ளமேட் விஷயம் அது’ என்று மறுபடியும் சொல்லியிருக்கிறார் பிரதமர்.
கேரள மீனவர்கள் இருவர் தாக்கப்பட்டபோது மட்டும் நம்முடைய அரசு தீர்க்கமாகச் செயல்பட்டது. அருகருகே இருக்கும் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், இப்படி வித்தியாசமாக நடப்பது சரியா?’ என்று ஜி.கே.வாசன் கேட்க, 'உங்களது கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது’ என்றாராம் பிரதமர்.
இன்னும் சூடாகி இருக்கிறது. 'இலங்கையில் நடக்கும் மாநாட்டுக்கு நாம் போகாமல் இருந்தாலாவது நம் மீதான விமர்சனங்களைத் தவிர்க்கலாம்’ என்று ஜி.கே.வாசன் சொல்ல, அதனை பிரதமர் மறுக்க... 'அப்படியானால் கொழும்பில் உங்களுக்குத் தமிழர்கள் கறுப்புக் கொடி காட்டினால், நம்முடைய நாட்டுக்குத்தானே அவமானம்’ என்று இவர் சீற... என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் உட்கார்ந்து விட்டாராம் பிரதமர்.
சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். 'தமிழ்நாட்டு மீனவர்களுக்காவது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? தினமும் அடிக்கிறார்கள்... தினமும் கொல்கிறார்கள்’ என்று வாசன் சொன்ன போது, 'அதுபற்றி கவனிக்கிறேன்’ என்றாராம் பிரதமர்.
இந்திய அரசின் சார்பில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளோம். அதனைத் தமிழர் மறுவாழ்வுக்குச் செலவு செய்தார்களா எனத் தெரியவில்லை. அதுபற்றி நாம் ஒரு குழு அமைத்து ஆய்வுசெய்ய வேண்டும்’ என்று சொன்னதற்கு, 'கவனிக்கிறேன்’ என்றாராம் பிரதமர். இறுக்கமான முகத்துடன்தான் இருவரும் விடை பெற்றுள்ளார்கள்.
இது இரகசியச் சந்திப்பாக முடிந்துவிடும் என்றுதான் பிரதமர் நினைத்துள்ளார். ஆனால், வெளியில் வந்த ஜி.கே.வாசன் நிருபர்களை அழைத்து, பிரதமரிடம் தான் இப்படி ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாகச் சொல்லி டெல்லி மீடியாக்களை பரபரப்பாக்கினார்.
அடுத்த அரை மணி நேரத்தில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், ஜி.கே.வாசனின் லைனுக்கு வந்துவிட்டாராம். பிரதமரிடம் கோரிக்கை வைத்தது பற்றியும் அதை மீடியாக்களிடம் சொன்னது பற்றியும், அகமது படேல் கடுமையாகக் கண்டித்தாராம்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வில் என்ன இருக்கிறதோ, அதனைத்தான் நான் எதிரொலித்தேன். நம்முடைய நிலைப்பாடுகளை மாற்றாவிட்டால், தமிழ்நாட்டில் காங்கிரஸால் அரசியல் செய்ய முடியாது’ என்ற அர்த்தத்தில் தன்னுடைய கருத்தை இவர் சொல்லி விட்டாராம். இந்த விஷயத்தை காங்கிரஸ் சீரியஸாகப் பார்க்கிறது.
ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் நிலைப்பாடு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லை. 'இன்றைய நிலையில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்றே தெரியவில்லை. தனித்துப் போட்டியிட்டால், ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாது என்பதால்தான், ஜி.கே.வாசன் இத்தகைய முடிவு எடுத்துவிட்டார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

ad

ad