புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2013

ஒருவர் தன்னுடை மதத்தினை மாத்திரமல்லாது ஏனையவர்களின் மதத்தினையும் அவர்களுடைய கலாசாரத்தையும் மதித்து நடக்க வேண்டும். 
அப்போதே நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும். இதேவேளை ஏனையவர்களின் மதத்தில் குறைகாண்பவர்கள் ஒரு போதும் உண்மையான பௌத்தர்களாக இருக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். 

கம்பளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் ஒரு பௌத்தன். அதற்காக நான் பௌத்த மதம் மாத்திரம் சரியானது என்று கூறமாட்டேன். ஏனைய மத்தினரை விமர்சிக்கும் ஒருவன் உண்மையான பௌத்தனான இருக்கமாட்டான். கௌதம புத்தரின் வழிகாட்டலில் படி நடப்பவர்கள் ஏனையவர்களின் மத, கலாசாரங்களை மதித்து நடப்பர் என்றார்.

ad

ad