புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில்
ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பெண்ணின் இரண்டாது கணவன் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன், மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்வர்கள் உட்பட 4 பேரே நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிசாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னமுகத்து வாரத்தில் உள்ள குறித்த இரு சிறுமிகளின் தாய் மற்றும் தந்தைக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இருவரும் பிரிந்த பின்னர் தாயார் வேறு ஒருவரை திருமணம் முடித்து வாழ்ந்துவந்த நிலையில் இவரது 14 மற்றும் 18 வயது சிறுமிகளை இரண்டாவது கணவன் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்ததுடன் அச்சிறுமிகளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று பொலிசார் கூலிவேலை செய்துவரும் 47 வயதுடைய குறித்த சிறிய தந்தையாரையும் தாயாரையும் மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்டுவந்த அக்கரைப்பற்று முதலாம்பிரிவு வடிகான்வீதி, கடற்கரை வீதிகளைச் சேர்ந்த 55 மற்றும் 48 வயதுடைய மீன் வியாபாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை 18 வயதுடைய யுவதி திருமணம் முடித்து இரண்டு மாதங்கள் எனவும் அப்பெண்ணை அவரின் கணவருடன் சேர்ந்து வாழவிடாது அவரை வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

14 வயது சிறுமி இரண்டு தரம் கர்ப்பம் தரித்த நிலையில் ஊறணி, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உள்ள சட்டவிரோத கருகலைப்பு நிலையங்களில் கருக்கலைப்பு செய்துள்ளதாக அச்சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தங்களை இந்த நரகத்தில் இருந்து விடுவிக்குமாறு பொலிசார் மற்றும் பலரிடம் முறைப்பாடு தெரிவித்தும் அது இடம்பெறவில்லை, எனவும் தாங்களுக்கு இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளதாக சிறுமிகள் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
.

ad

ad